Primary tabs
தொல்லை நம் பிறவி யெண்ணிற் றொடுகடல்மணலுமாற்றா‘ என்று (சீவக 270) கூறியதனோடு ஒப்பிடத்தகும். பதேசம்-பிரதேசம்; வடமொழித்திரிபு. மறுபடி துண்டு செய்ய முடியாத ஓர் அளவின தாகிய அணு தங்கும் இடம் பிரதேசம் எனப்படும்.
திரவ்ய சங்க்ரஹம். 71. காண்க. விட்டவை; பலவின்பால்வினையாலணையும் பெயர். மனித யாக்கையாகியவிட்டவை என இருபெயரொட்டும் ஆக்கலாம்.(35)
தேவகதி வரலாறு
(இ-ள்.) திருமலி - நல்வினைநிறையும், தவத்தின்-தவத்தினால், தேவர்தம் உலகில் சென்று - தேவருலகிற் சென்று, இருமுழம் ஆதியாக-(நவக்ரைவேயக தேவருடலின் உயரமான) இரண்டு முழம் முதலாக, எய்திய வகையின்-தாம் அடைந்த தேவ வகுப்பிற் கேற்ப, ஓங்கி வரு-உயர்ந்து வருகிறசிலை இருபத்தைந்தின் வந்து உறும்-(பவணதேவரின் உயரமான) இருபத்தைந்து வில் லளவாக வந்து பொருந்தும், அங்கமெல்லாம் - யாக்கைஅனைத்தையும், பெற்றது - பெற்றதனை, ஒருவரால்-, உரைக்கலாமோ - (இத்துணையவென்று) அளவிட்டுக் கூற முடியுமோ? உலந்தன அனந்தமன்றோ - (நாம்) எடுத்துக்கழிந்தனவாகிய தேவவுடம்புகள் அனந்தமல்லவோ?
இரண்டு முழம் முதலாக
இருபத்தைந்துவில் ஈறாக வுள்ள தேவப்பிறவிகளில் நாம் எடுத்துக்கழித்த யாக்கைகள்
எண்ணற்றனவாகும் என்றானென்க.