தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


- 58 -

இருமுழமும், இருபத்தைந்து வில்லும் அங்குள்ள தேவர்களின் உயரத்தினை யுணர்த்திற்று.

உறுதல் - பொருந்துதல். அங்கம் - உடல். திரு-நல்வினை; ‘திருமுயங்கவில்லை யெனின்‘ (சீவக.2556) என்ற இடத்துப்போல.  நமக்கு மேலேயுள்ள வானுலகத்துச் சௌதர்ம கற்பம் முதலாக அச்சுத கற்பம்வரையிலும் பதினாறு கற்பவுலகங்களிருக்கின்றன.  அவை (எட்டுப் பழுவையுடைய ஓர் ஏணியின் மத்தியில் மற்றொரு கால் நாட்டினாலொப்ப*) இரண்டிரண்டாய், ஒன்றின்மே லொன்றாகவிருக்கின்றன.  அவை தொகை வகையால் எட்டும் விரிவகையால் பதினாறு மாகும்.  அவற்றிற்குமேல் ஹேஷ்   டிமத்திரயம், மத்தியமத்திரயம், உபரிமத்திரயம் என்ற மூன்று பிரிவினையுடைய நவக்ரைவேயகமும், அதற்கு மேலுள்ள நவாணுதிசையும், பஞ்சாநுத்தரமும் ஆகிய (ஐந்து பிரிவினையுடைய) மூன்று அஹமிந்திரவுலகம் இருக்கின்றன.  அதற்குமேல் உலக உச்சியாகிய மோக்ஷஸ்தானம் உளது. கற்பவுலகத்தின் தொகைவகை எட்டு்; அஹமிந்திரவுலகத்தின் தொகைவகை ஐந்து.  இப்பதின் மூன்று ஸ்தானங்களிலுமுள்ள தேவர்களின் உடம்பின் உயரமாமவன;- முதலில் உள்ள சௌதர்ம, ஈசன கற்பத்துத் தேவர்களுக்கு ஏழுமுழமாகும்.  இந்த ஏழுமுழத்திலிருந்து மேற்கூறிய பதின்மூன்று      ஸ்தானங்களிலும் முறையே அரையரை முழம் குறைந்துள்ளதாகும். அதாவது, முறையே (1) சௌதர்ம, ஈசான கற்பத்தவர் கட்கு 7 முழம், ( ) சனத்குமார, மாஹேந்திரர்களுக்கு 6-1/2 முழம். (3) பிரம்ம,பிரம்மோத்திரர்களுக்கு 6முழம்.(4) லாந்தவ, காபிஷ்டத்தார்க்கு 5-1/2 முழம் (5) சுக்ரமஹாசுக்ரர்களுக்கு 5 முழம். (6) சதார, சஹஸ்ராரர்களுக்கு 4-1/2 முழம்.  (7) ஆனத, பிராணதர்க்கு 4 முழம் (8) ஆரண, அச்சுதர்க்கு 3-1/2 முழம்.(9) நவக்ரைவேயகத்துள் ஹேஷ்டிமத்ரயத்தார்க்கு 3 முழம்.  (10) மத்திமத்ரயத்

*மூன்று காலையும் எட்டுப் பழுவையு முடைய எணி.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:53:45(இந்திய நேரம்)