Primary tabs
சய்யையில் பிறந்த மித்யா திருஷ்டி தேவர்கள் மட்டும் பிறவியில் மீண்டும் மீண்டும் பிறந்து உழல்வார்களாதலின், ‘இருமுழமாதியாக‘ என்று கூறினார் என்க.
தேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்
(இ-ள்.) இது துன்பகாரணம் என்று - இந்நரகப்பிறவி துன்பத்திற்கே காரண மாகியுளது என்று கருதி,
* அருகனின் உருவமான நிர்க்கந்த தபம் செய்யாதவர்கள் அக மிந்திர வுலகமாகிய நவக்ரைவேயகம் நவாணுதிசை பஞ்சாணுத்தரங்களில் பிறவார் என்ற பொருள்பட ‘அருகனதுருவ‘மில்லா ரகமிந்தி ரத்துட் டோன்றார்‘ (மேரு. 75-ல்) என்று கூறியது உருவத்தினை மட்டும் பொதுவாகக் கூறினதே யன்றிறபரிணாமத்தை அனுசரித்துக் கூறினது அன்று. ஏனெனில் சந்தேஹமமத் தெளிந்த க்ஷாயிக சம்யந்த்ருஷ்டிகளே நவாணுதிசைபஞ்சாணுத்தரங்களில் பிறப்பார்கள் என்ற கருத்தினை உட்கொண்டு ‘ஆகுபவர் அணுதிசா நுத்தரத் தைய மறத் தெளிந்தார்‘ (மேரு.77) என்று குணவிசேக்ஷத்தினைப் பிரித்துக் கூறி யிருப்பதனாலும், “உபரிமோபரிம க்ரைவே யகத்தளவும் திரவியநிர்க்கந்த லிங்கத்தினையுடைய மித்தியாதிருஷ்டிகளும் சாரித்திரபலத்தினால் அடைவார்கள். அதற்கு மேலுள்ள நவாணுதிசைபஞ்சாணுத்தரங்களில் க்ஷாயிக சம்யத்திருஷ்டிகளேம் தவத்தினைச்செய்து பிறப்பார்கள்” என்று குணவிசேக்ஷத்தினைப் பிரித்துக்கூறி யிருப்பதனாலும், காதல லோகாணி என்னும் நூலில், “உபரிமோ பரிமக்ரைவே யகத்தளவும் மித்யா திருஷ்டிகள் பிறக்கும் ஸ்தானம் 1 உண்டு” என்று கூறியிருப்பதனாலும்,ராஜ வார்த்திகம் முதலிய நூல்களிலும் இங்ஙனமே கூறுவதற்கேற்ப இவ்வாசிரியரும் ‘இருமுழ மாதியாக‘ எனக் கூறினதாகும்.
* மேரு. நவ. ப. 14. பக.
1 உபபாத சய்யை என்றது தேவர்கள் பிறக்கும் ஸ்தானம்.(இடம்)