Primary tabs
துடக்கு அறுக எனவும்-(இதன்) தொடர்பு விட்டகல்கவென்ற போதினும், துஞ்சா-(கட்டின ஆயுள் முடிவதற்கு முன்) சாகாதனவும், அன்பும்-நேசமும், உறா -அடையாதனவுமான, நரகர்யாக்கை அவைகளும்-நரகருடம்புகளும், அமரர் கற்பத்து இது-வானுலகத்துப்பெற்ற இவ்வுடம்பு, இன்பக்காரணம் என்று -இன்பக்காரண மென்று விரும்பி, எம்முடன் இயல்க என்று-(என்றும்) எம்மை அகலாது இயல்க என, அன்பு செய்தனகள் தாமும்-அன்புகொண்ட தேவ யாக்கைகளும், அழியும் நாள் அழியும்-தத்தம் எல்லை முடிவில் அழிந்தே தீரும். (எ-று.)
இன்ப துன்பங்கட்குக் காரணமான தேவநரகயாக்கைகளில் நாம் விருப்பு வெறுப்புற்றபோதினும் அவை நிலைத்திரா வென்றனனென்க.

துடக்கு-சிக்கு; அல்லது கட்டு. உயிரோடு தொடர்ந்து கட்டியுள்ள உடலின் தொடர்பு. மனிதர், விலங்கு இவர்கட்கு இருப்பது போலத் தேவர்களுக்கும் நரகர்களுக்கும் அகாலமரணம் என்பது இல்லை யாகலின் ‘துஞ்சா’ என்றார். ‘ஒளபபாதிக சரமோத்தம தேஹாஸங்க்யேயவர்ஷாயுஷோ நபவர்த்யாயுஷ;’ (தத். ஸூ.86) நரகருடல் இடையில் மரண மெய்துவதில்லை யென்பதனை, ‘எறிவெம்படையா லிவர்வீழ்ந்தெழலால், உறுவெந்துயரல்ல துடம்பு விடார்’ (மேரு.942.) என்பதனா லறியலாகும். புதிதாகப் பிறந்த நரகனைக் கண்டபோதே முன்னிருந்த நரகர்கள் நாய்களைப்போல் துன்புறுத்துவதனாலும், பவணத்தேவர்களும் கலகமூட்டித் துன்புறுவிப்பதனாலும், ‘அன்புறா நரகர் யாக்கை’ என்றார். ‘முனை மூட்டுவர் கீழுள தேவரிவர’ மேரு. 943. என்பது காண்க.தேவரின் யாக்கை இன்பக்காரண மாதலின் ‘அன்புச்செய்தன‘ என்றார்.
துடக்கு-சிக்கு; அல்லது கட்டு. உயிரோடு தொடர்ந்து கட்டியுள்ள உடலின் தொடர்பு. மனிதர், விலங்கு இவர்கட்கு இருப்பது போலத் தேவர்களுக்கும் நரகர்களுக்கும் அகாலமரணம் என்பது இல்லை யாகலின் ‘துஞ்சா‘ என்றார். ‘ஒளபபாதிக சரமோத்தம தேஹாஸங்க்யேயவர்ஷாயுஷோ நபவர்த்யாயுஷ;’ (தத். ஸூ.86) நரகருடல் இடையில் மரண மெய்துவதில்லை யென்பதனை, ‘எறிவெம்படையா லிவர்வீழ்ந்தெழலால், உறுவெந்துயரல்ல துடம்பு விடார்‘ (மேரு.942.) என்பதனா லறியலாகும். புதிதாகப் பிறந்த நரகனைக் கண்டபோதே முன்னிருந்த நரகர்கள் நாய்களைப்போல் துன்புறுத்துவதனாலும், பவணத்தேவர்களும் கலகமூட்டித் துன்புறுவிப்பதனாலும், ‘அன்புறா நரகர் யாக்கை‘ என்றார். ‘முனை மூட்டுவர் கீழுள தேவரிவர்‘ மேரு. 943. என்பது காண்க.தேவரின் யாக்கை இன்பக்காரண மாதலின் ‘அன்புச்செய்தன‘ என்றார்.