Primary tabs
உறா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். நரகர்யாக்கை யவைகளும் என்பதின் உம்மை, இழிவுசிறப்பு. செய்தனகள், கள்-விருதிமேல் விகுதி. (37)
(இ-ள்.) வந்து உடன் வணங்கும் வானோர் திரளாகக் கூடி வந்து உடனே வணங்கும் வானவர்களின், மணிபுனை மகுடகோடி-மணிகளா லியன்ற முடிகளின் தொகை,தம் திருவடிகள் ஏந்தும் - தம் திருவடிகளைச் சுமக்கும், தமனிய பீடமாக-பொற்பீடமாக அமைய, (அதாவது, தமது திருவடிக்கீழ் முடிவைத்துத் தாழ்ந்து வணங்கித்) தொழ, இந்திர விபவம் பெற்ற-இந்திர வைபவம் அடைந்த, இமையவர் இறைவர் எனும் - தேவேந்திரராயினும், தம்
திரு உருவம் பொன்ற - தம்முடைய வைபவமும் உருவமும் நாசமெய்த, தளர்ந்தனர் அனந்தமன்றோ - மனந்தளர்ந்திறந்தவர் அனந்த மல்லவோ? (எ-று.)
தேவர்கோன் ஆயினும் இறத்தல் நிச்சயமாதலின், மனிதராகப் பிறந்த நாம் இறத்தற்கு ஐய முளதோஎன்றானென்க.
வானோர்கள் இந்திரனை வணங்குவதும், அவற்கு ஏவல் புரிவதும் இயல்பு. இதனை,
“தேவரே தாமு மாகித் தேவராற் றொழிக்கப் பட்டும் ஏவல்செய் திறைஞ்சிக் கேட்டு மணிகமாப் பணிகள் செய்தும் நோவது பெரிதுந் துன்ப நோயினுட் பிறத்த றுன்பம் யாவதுந் துன்பமன்னா யாக்கை கொண்டவர்கட் கென்றான்”என்று (சீவக. 2811-ல்) கூறுவதனாலும், ‘வந்து வானவர் திசைதொறும் வணங்கினர்‘ என (யசோ.318-.ல்)
1 பாடம் வனந்த.