Primary tabs
இருக்குமாயின் நம் உடம்பின் பற்றினை அறவே ஒழிக்கவேண்டு மென்பான் ‘பரிவு ஒழிந்திடுக‘ என்றான், ‘பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று, நிலையாமை காணப்படும் என்று(குறள் 349.) தேவர் கூறியதனாலு மறிக. மாட முன்னது. முன்னது மாடம் என மாற்றுக. எவ்வகையும் என்பதிலுள்ள ‘உம்மை’ பிரித்துக் கூட்டப்பட்டது. புதியமனை புகுவதற்கும் புதிய ஆடை உடுப்பதற்கும் நாம் பெரு மகிழ்ச்சி யடைவதுபோல, நூதனபிறவியும் புதிய வுடலும் அடைவதற்குக் காரணமானமரணத்திற்கும் நாம் அஞ்சாமலும் வருந்தாமலும் மனம் மகிழவேண்டு மென்பது முக்கியமான கருத்து. (40)
அபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்
(இ-ள்.) அண்ணல் நீ - அண்ணலாகிய தாம், அருளிற்று எல்லாம் - அருளிச் செய்ததெல்லாம், அருவருப்புடைய மெய்யில் நண்ணிய - அருவருப்புள்ள உடம்பைச் சார்ந்ததனை, நமது என் உள்ளத்தவர்களுக்கு - நம் முடையது என்று எண்ணுகின்ற மனத்தையுடையவர்களுக்கு, உறுதி நாடி(ஆகும்) நன்மையை ஆராய்ந்து கூறியனவாகும். கண்அனாய் -கண்போன்றவரே, விண்ணின் மேல் இன்பம் அல்லால் - தேவருலகத்து இன்பத்திற்கும்மேலான (மோக்ஷவுலகின்) அனந்த சுகத்தை இச்சிப்பதே யல்லது, விழை பயன் - விரும்பும் தன்மையுள்ள இல்லறப் போகப் பொருள்களை, வெறுத்து நின்ற-(பிறவிக்குக் காரணமென்று) வெறுத்து துறவு பூண்டு நின்ற, நங்கட்கு - நமக்கு, இன்ன கட்டுரை - இவை போன்ற
1 பாடம் கின்னுங்.