Primary tabs
இவற்றை வடநூலார் முறையே, இஹலோகபயம், பரலோகபயம், ஆகஸ்மிகபயம், அரக்ஷகபயம், (அல்லதுஅத்ராணபயம்), அகுப்திபயம், வேதனாபயம், மரணபயம் என்பர். இவ்வேழு வித அச்சமும் அடையாதவரே நற்காட்சியிற் சிறந்தாரென்றுணர்க, இதனை, ‘அச்சங்களேழு மின்றி... பொழிதல் மாதவம்‘ என்று (மேரு. 801.ல் ) கூறுவதனா லுணர்க இவ் இளைஞரிருவரும் இவ் வேழுவித அச்சமும் நீங்கியவர்களே. இனி மேலும் அச்சமெய்தாது தங்கள் சொற்படியே நடக்கின்றேன் என்று கூறுவாள், ‘இன்று... தெருள‘ என்றாள். மரணகாலத்தில் அறவுரை புகலுவதனால் இறைவன் என்றாள். பொருள் இது எல்லாம், ஒருமை பன்மை மயக்கம். ‘என்றும்‘ என்பதில் உம்மை தொக்கது. (44)
இறுதியில் நினைக்கவேண்டிய திதுவெனல்.
(,இ-ள்.) ஒன்றிய உடம்பின்-உயிரோடு ஒன்றாகத்தோன்றும் உடம்பினின்றும், வேறாம்-வேறாகிய, உயிரின் உருவம்-உயிரின் உருவத்தை, உள்ளி - நினைந்து, நன்று என நயந்து - இதுவே நலந்தருவது என்று விரும்பி நங்கள் நல்லறப்பெருமை நாடி-நம் இறைவன் அருளிய அறத்தின் மாட்சியினை ஆராய்ந்து, வென்றவர் சரணம் மூழ்கி-ஐம்பொறிவாயில் வென்றவர்களையே புகலாக அடைந்து வணங்கி, நம் உடலம் விடுதும் என்றான்-நம்உடம்பினை விட்டு நீங்குவாம் என்று (அபயருசி) மொழிந்தான்; இது செய்கை நன்று என்று-இச் செய்கை மிகநல்ல தென்று, நங்கையும் நயந்து கொண்டாள்-தங்கையும் விரும்பி மேற்கொண்டாள்.(எ-று.)