Primary tabs
கொண்டுள்ளேன். இனி நான் செய்யவேண்டுவது யாது என்று வினவினா ளென்க.
நயத்தல்-விரும்பல். மறவர், பலியிடப் பிடித்தேகுவதை யுணர்ந்தும் அச்சமின்மையின் ‘நடுக்கமும் அடுத்ததில்லை‘ என்றாள். ‘நடுக்கமும்‘ என்றதனால் யாதொரு அச்சமும் எனப் பொருள் கொள்ளப்பட்டது. உயிர்கட்கு அச்சம் பலவாயினும் அவை தொகுத்து ஏழுவகையாகக் கூறப்படும்.
அவை;--
(1) இம்மையினாலாய அச்சம்;--கடன், மழையின்மை முதலியவற்றாலாயது
(2) மறுமையைக்குறித்து ஏற்படும் அச்சம்;--யான் தீய செயல் பல புரிந்துளேனாதலின் மறுமையில்எப்பிறவி நேருமோ? என்று அஞ்சுவது.
(3) திடீரெனத் தோன்றும் அச்சம்;--திடீரென்று உண்டாகும் நிகழ்ச்சி குறித்து ஏற்படும் அச்சம்; இடி, சர்ப்பம் முதலியவற்றாலுண்டாவன.
(4) எதிர்கால வாழ்க்கையைக்குறித்து ஏற்படும் அச்சம்;-- இனி யார் எனக்குப் புகல் அளிப்பவ ரென்றுஏங்குவது.
(5) மனம், மெய், மொழிகளாலாய அச்சம்;-மனம் மெய் மொழி என்ற மூன்றும் அடக்கமின்றி நிகழ்ந்த சிக்கண் ஏற்படும் அச்சம்.
(6). வேதனையினாலாய அச்சம்; நோய் முதலிய வேதனையினாலேற்படும் அச்சம்.
(7). சாதல்குறித்து ஏற்படும் அச்சம்;- மரணகாலத்தைக்குறித்து அஞ்சுவது.