Primary tabs
விலங்கிற் பெண்ணாகார்‘ என்றாராகலின். பெருந்திறல்-மிக்க வன்மை. பேராத்திண்மை - தளராத மனவுறுதி. சாதிபேதம் முதலியன இன்றி ஆடவரைப்போலவேபெண்களும் (அறிவுள்ள விலங்குகளும்) முத்திக்கு முதற்காரணமாய நற்காட்சியைப் பெறலா மாதலின், இங்கு அபயமதியும் நற்காட்சி பெற்றவள் எனச் சிறப்பித்தார். இப்பொழுதுள்ள பிறவியின்கண் ஏற்படும் வாஞ்சையை ‘இம்மைக் காதல்‘ என்றார். பெண்களும் நற்காட்சிபெற்றுச் சிறப்பெய்துவர் என்பதனை அருங்கலச் செப்பு, அஷ்டாங்கசரிதம் முதலியவற்றுள், அனந்தமதி நங்கையும், இரேவதை யென்ற இராணியும் நற்காட்சி பெற்றுச் சிறப்பெய்தினர் என்று கூறி யிருப்பதனாலறிய லாகும்.
(இ-ள்.) ஐய-ஐயனே, இவண் இன்று-இவ்விடத்திப்போது, எண்கண் அருளிய-என்னிடம் உரைத்தருளியபொருள் இது எல்லாம்-இவ்வுறுதிப்பொருள்கள் யாவும், நன்று என நயந்து கொண்டேன்-உயிருக்கு நலம் பயப்பன வென்று விரும்பி உட்கொண்டேன்; நடுக்கமும் அடுத்தது இல்லை-யாதொரு அச்சமும் (என்பால்) அடையவில்லை; என்று (ம்) எனக்கு இறைவன் நீயே-இனி எந்நாளும் எனக்கு உத்தமகுருவும் நீரேயாவீர், என-என்றுகூறி, இருகையும் கூப்பி-கரமிரண்டுங்குவித்து வணங்கி, இன்று-இப்போது,
யான்--, செய்வது யாது-செய்யத்தகுவது யாது, தெருள அருளுக-தெளிய வுரைத்தருளுக, என்றாள்-என்று வினவினாள். (எ-று.)
ஐயனே,
நீவிர் கூறிய யாவற்றையும் விரும்பி உட்கொண்டேன். நடுக்கமுமில்லை. உம்மையே
இறைவனாகக்