தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


- 78 -

(இ-ள்.) உறுதியை பெரிதும் ஆக்கி-உயிர்கட்கு, நன்மையான நல்வினைப்பயனை  மிகச்செய்து,  உலகினுக்கு இறைமை நல்கி-உலகத்திற்கு  இறைவனாந்  தன்மையைப் அருளி,  பிறவி செற்று-பிறவியைக்  கெடுத்து வீட்டின் பெருமையை  உம் தருதலான்-வீட்டின்பப்பெருமையினையும் அடையச் செய்வதனால், அறிவினில்  தெளிந்தகேவல ஞானத்தால்  தெளியவுணர்ந்த, மாட்சி-பெருமையினை யுடைய,  அரதனத்திரயம் என்னும்-நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் என்று கூறப்படுகிற ரத்னத்ரயமாகிற, பெறுதலுக்கு அரிய செல்வம்-(மக்கள்) பெறுதற்கு  அரிதாகிய செல்வத்தை,  பெரிதும்-மிகவும்,பெற்றனம்-அடைந்துளோம், என்றார் -என்று  ஆலோசித்து மகிழ்ந்தனர்.  (எ-று.)

உறுதி முதலியன அளிக்கும் மும்மணிகளையும் அடைந்துளோம் என்ற மகிழ்ந்தனரென்க.

ரத்னத்ரயம்-வடசொல்.  த்ரயம்-மூன்று; அவை நற்காட்சி முதலியன; (விரிவு யசோ. 235-ல் காண்க.)  அவைமும்மணிகள் என்றும் வழங்கப்படும்.  அம் மும்மணிகளைப் பெற்று நிகழ்ந்தார் நல்வினையைப் பெறுவதனால்,‘உறுதியைப் பெரிதும் ஆக்கி’என்றும்,  அதனால்  மறுமையில் தேவேந்திர  பதவியையும் அங்கு நின்றும்  பூமியில்   வந்து மானிடராகப் பிறந்து சக்ரவர்த்தி பதவியையும், பின்பு  துறவுபூண்டு  காதிவினையை வென்று  அருகத்பதவியையும் எய்துதல் முறையாதலின்,  ‘உலகினுக்கு  இறைமைநல்கி‘  என்றும், அகாதியையும் வென்று பிறவி வேரறுத்து வீடு அடைவதனால், ‘பிறவி செற்று அரியவீட்டின் பெருமையைத் தருதலான், ‘என்றும் கூறினார்.இதனை,*‘முச்சக்கரத்தொடு சித்தியு மெய்துவர்  நச்சறுகாட்சியவர’  என்ற அருங். 56- ஆம் செய்யுளாலும் அறியலாகும்.  இம்மும்மணிகள்,  இறைவனருளிய திருவறத்தில் சிறந்ததும்,  பெறுதலுக்கு அரியதும்,  முக்திக்கு

 

* தேவேந்திரன்  ஆஜ்ஞாசக்ரம்,  சக்ரவர்த்தியின்  சக்ரம்

அருகனின் தர்மசக்ரம்.

 



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:57:00(இந்திய நேரம்)