Primary tabs
முதற்காரணமு மாதலின், ‘அறிவினில் தெளிந்தமாட்சி அரதனத்திரய மென்னும் பெறுதலுக் கரிய செல்வம்‘என்றார். அறிவு-கேவல ஞானம். தெளிந்த-தெளியவுணர்ந்த. மீண்டும் நழுவவிடாது நிகழ்வதனால், ‘பெரிதும் பெற்றனம்‘ என்றார். உம் பிரித்துக்கூட்டப்பட்டது.
இதுமுதல் ஐந்துகவிகளால் இளைஞரிவரும் பஞ்சபரமேஷ்டிகளை வணங்குவதனைக் கூறுகின்றார்
சித்தர் வணக்கம்
(இ-ள்.) ஈங்கு-இவ்விடத்தே, நம் இடர்கள் தீர்க்கும் இயல்பினார் நினைதும் ஏல்-நமது பிறவித் துன்பங்களைநீக்குந் தன்மையுடையாரைப் பற்றி (யாவரென)ஆராய்வோமாயின், இவ்வுலகத்து ஒங்கிய உம்பர் - இம்மூவுலகத்திற்கும் மேலேயுள்ள உச்சியின்கண், ஒளி சிகாமணியின் நின்றார் - ஒளியினை யுடைய முடிமணி போலவிளங்குகின்றவரும், வீங்கிய கருமக் கேட்டின் - மிகுதியாகிய (ஞானவரணீயம் முதலிய எண்) வினைகளின் கேட்டினால், விரிந்த எண்குணத்தார் ஆகி - கடையிலாஞானம் முதலிய எண்குணங்களும் விளங்கப்பெற்றவருமாகி, தீங்கு எலாம் அகற்றி நின்ற - எக்குற்றங்களும் போக்கி நின்ற, சித்தரே - சித்தபரமேஷ்டிகளே, செல்லல் தீர்ப்பார் -நம்பிறவித் துன்பத்தைநீக்குவார் (ஆதலின் அவரை வணங்குவம்). (எ-று.)
எண்வினையின் நீங்கி எண்குணங்கள் விளங்கிய சித்தரை வணங்கினரென்க.
இறைவனை நாம் வணங்குவதனால் நமக்கு யாதொருபயனும் அவரால் அளிக்கப் படுதலில்லை; ஆயினும் அவரை