Primary tabs
நாமகருமத்தில் பதின்மூன்றும், தரிசனாவரணீயத்தில் மூன்றும் ஆக முப்பத்தாறு கர்மங்களை கெடுத்துப்பின்பு, 10-ஆவதான சூட்சும சாம்பராய குணஸ்தானத்து மோஹநீயத்தில் (எஞ்சி நின்ற) ஒன்றினையும் கெடுத்துப்பின்பு, 12 ஆவதான க்ஷிணகஷாயகுணஸ்தானத்துத் தரிசனாவரணீயத்தில் (எஞ்சி நின்ற) ஆறு கர்மங்களையும், ஞானாவரணீயத்தில் ஐந்தும், அந்தராயத்தில் ஐந்தும் ஆகிய பதினாறு கர்மங்களையுங்1 கெடுத்து அப்பொழுதேகடையில்நான்மையுடன் பதின்மூன்றாவது ஸயோகிகுண ஸ்தானத்தை யெய்திக் கால் நிலந்தோயாக் கடவுளாய்விளங்க, அதனையறிந்த இந்திரன் முதலிய தேவர்கள் சமவசரண மென்ற கோயிலின் மத்தியிலுள்ள கந்தகுடி மண்டபம், முக்குடை, அசோக விருக்ஷம், அறவாழி, சிம்மாசனம், பொற்றாமரை முதலியவற்றை இறைவனின் புண்ணிய மஹிமைக்கேற்பத் தங்கள் தெய்விகசக்தியால் இயற்ற, அவற்றுள் அறவாழி முன்செல்ல மலர்மிசையேகி ஆங்காங்கேயுள்ள பவ்யஉயி்ர்களனைத்திற்கும் அர்த்தமாகதி யென்னும் பகவத்பாஷையாகிய திருமொழியினால் உபதேசம் செய்வத இயல்பாகும். இதனையே, ‘பெருமலையனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப் பெற்ற திருமலி கடையி னான்மை திருவொடு திளைப்பர்‘ எனவும், ‘உரிமையி னுயிர்கட்கெல்லா மொருதனி விளக்கமாகித் திருமொழியருளும் தீ்ர்த்தகரர்கள்‘ எனவும் கூறினார். திரு-செல்வம்; சமவசரணம் முதலிய செல்வம். மலிதல் - நிறைதல். கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா இன்பம், கடையிலா வீரியம் என்ற நான்கு குணங்களையும், ‘கடை யில் நான்மை‘ என்றார். நான்மை-நான்குகுணங்கள்; அநந்த சதுஷ்டயம் என்பர் வடநூலார்.கடையில் நான்மை என்பதனை,
1 4,7.9,10,12-வது குணஸ்தானத்து முறையே 7,3,36
1,16 ஆக 63 கர்மங்கள்.