Primary tabs
காதிவினையை வென்று கடையில் நான்மை முதலிய விபவங்களைப்பெற்றுத் திருமொழி யருளுந் தீ்ர்த்தங்கரர்களை நினைத்துத் துதித்தனரென்க.
காதிவினை வெல்லற்கு அருமையாதலின், ‘பெருமலையனைய காதிப்பெரும்பகை’ என்றான். வினைகெட்டபிறகே ஞானம் விளங்கிச் சிறப்பெய்துவதனால், ‘காதிப்பெரும்பகை பெயர்த்துப் பெற்ற திருமலி கடையில்நான்மை‘என்றான். இவற்றை, ‘வினையி னீங்கி விளங்கிய ஞானத்தோர்முனைவன்*’ என நீலகேசி(862) யிலும், ‘வினையினீங்கி விளங்கிய வறிவின் முனைவன்‘ எனத் தொல்காப்பியம் (1594-ம்) சூத்திரத்திலும் கூறியிருப்பதனா லறியலாகும். பற்றியிருந்த வினையின் தொடர்பு நீங்க இறைவன் தன்மை யடைதல் மரபு. வினைகள் உயிருடன் கலந்திருப்பதனால் ‘பெயர்த்து‘என்றார். பெயர்த்தல் - கிளப்புதல்.
காதிவினையின் உட்பிரிவு அறுபத்து மூன்றும் கெடுமாறும் பிறவும் நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் என்ற மும்மணியும் நிறையப் பெற்றுச் சுத்தோபயோகத்திற்1 பொருந்தின உயி்ா மித்யாதிருஷ்டி முதலாகக் கூறப்பட்ட குணஸ்தானம் 2 பதினான்கனுள், 4-ஆவதான அஸம்யதகுணஸ்தானத்தை யடைந்து 3 (காதிவினையின் உட்பிரிவான) மோஹநீயத்தில் ஏழுகர்மங்களைக் கெடுத்துப் பின்பு 7-ஆவதான அப்ரமத்தகுணஸ்தானத்து ஆயுஸ்ய கருமத்தில் மூன்றும் கெடுத்து, பின்பு குணஸ்தான வரிசையாகத்தூய எண்ணங்களில் விருத்தியாகி, 9-ஆவதான அநிவிருத்தி கரணம் என்ற குணஸ்தானத் மோஹநீயத்தில் இருபதும்,
*
ஈண்டு ‘ வினையின் நீங்கி‘ என்பதன் உரையோடு, ‘பொறிவாயி லைந்தவித்தான்‘ என்பதன் உரையும் ஒப்பு நோக்கற்பாலன.
3
4-வது குணஸ்தானத்துக்கூறிய 7 வினைகளும் அங்கு உபமத்தை யடைந்தாயின் 7-ஆவது குணஸ்தானத்தில்அவஸ்யம் கெடு மென்றுணர்க.