Primary tabs
மணியின் - இன், ஒப்பப் பொருளில் வந்தது. சித்தரே - ஏகாரம் தேற்றம்; பிரிநிலையுமாம் சித்தரின் தன்மை கிரியாபுத்தகம் சித்த பத்தியில் காண்க. (48)
அருகர் வணக்கம்
(இ-ள்.) பெருமலை அனைய - பெரிய மலையை நிகர்த்த, காதிப்பெரும் பகை பெயர்த்து-(தம் உயிருடன் பொருந்தியுள்ள) காதிவினையாகிய பெரும் பகையை பேறு படுத்திவென்று, பெற்ற - அதனால் பெற்ற, கடையில் நான்மை-அனந்த சதுஷ்டயத்துடன், திருமலி - (இந்திரன் இயற்றுவித்த சமவசரணம் முதலிய) செல்வம் நிறைந்து, திருவொடு திளைப்பர் ஏனும் - மோட்சலட்சுமியின் இன்பந் துய்ப்பவ ராயினும், உரிமையின் - (அயோகி குணஸ்தானத்தின்) முறைப்படி, உயி்ர்கட்கு எல்லாம் - உயிர்க ளனைத்திற்கும், ஒரு தனி விளக்கம் ஆகி - தத்தம் பாஷையில் விளக்கமாகத் தெரியும் வண்ணம், திருமொழி அருளும் - திவ்யத்வனியினால் உபதேசஞ் செய்தருள்கின்ற,தீர்த்தகரர்களே - தீர்த்தங்கர பரமதேவர்களே, துயர்கள் தீ்ர்ப்பார் - (நமது) பிறவித் துயர்களை நீக்குவதற்கு உரியர்; (ஆதலின் அவர்களை வணங்குவம்). (எ-று.)