தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 88 -

ளிடத்திலும், அவற்றை  யுடையாரிடத்திலும் வணக்கமாயிருத்தல்,  7. தாம் கற்றவைகளைப் பிறருக்கு  வஞ்சனையின்றிக்  கற்பித்தல், 8  நற்குணவான்கள் தம்மை   மன்னித்ததற்கேற்ப ஒழுகுதல் என  எட்டுவிதமாகும்.

    2. தரிசனாசாரம்;- 1.  ஐயமின்மை - திருவறத்தை ஐயமின்றித் தெளிதல்,  2. அவாவின்மை - பற்றின்றியிருத்தல், 3.உவர்ப்பு  இன்மை - பரமாணுக் கூட்டங்களது தன்மையை உள்ளவாறு உணர்ந்து அருவருப்பு இன்றி இருத்தல்,  4. மயக்கம் இன்மை - மூட்செய்கைகளில் மயங்கி நடவாதிருத்தல், 5. செய்பழி நீக்கல் - உலகோர் செய்த பழியை வெளியாகாவண்ணம் மறைத்தல், 6. திரிந்தாரை நிறுத்தல் - நீதியினின்றும் நழுவினைவரை முன்போல் நீதியில் நடக்கச் செய்தல், 7. அன்புடைமை - பெரியாரைக்காணின்  கன்று கண்ட  கறவை போல அன்புடனிருத்தல், 8. அறவிளக்கஞ் செய்தல் - திருவறத்தை யாவருக்கும் உபதேசித்தல் என எட்டுவிதமாகும்.

    3. சாரித்ராசாரம்;-1. (ஒரறிவுமுதல் ஐயறிவுவரையிலுள்ள  எவ்வுயிர்களையும்)  கொல்லாமை, பொய்யாமை, களவின்மை, காமமின்மை.  அகப்பற்று புறப்பற்று இன்மை ஆகிய மஹாவிரதம் ஐந்தும்;  நடத்தல், பேசுதல், உணவு  உட்கொள்ளல்,  பண்டங்கள் பொருள்கள் முதலியவைகளைச் சோதனை செய்து வைத்தல், எடு்த்தல், சிறுநீர் மலங் கழித்தல் முதலிய  காலங்களில்  பிறவுயிர்களுக்குத் துன்பம்  நேராவண்ணம் மிதமாக நிகழ்வதாகிய சமிதி ஐந்தும்; தீய எண்ணமும், மொழியும், செயலும் இன்றி அடங்குவதாகிய குப்தி மூன்றும் என்கிற இப் பதின்மூன்றுமாகும்.  இதனை  வடநூலார், பஞ்சமஹாவிரதம், பஞ்ச சமிதி, த்ரிகுப்தி  என சாரித்ராசாரம் தர்யோதசவிதம் என்பர்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:58:38(இந்திய நேரம்)