தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 89 -

   4. தபாசாரம்;-1. *அனசனம் முதலிய பன்னிரண்டு விதமாகும். (யசோ. 23 உரையில் காண்க.)

    5 வீர்யாசாரம்;-1.உணவினாலாகிய பலவீரியம், 2. கர்ம உபசமத்தாலாகிய சாமர்த்திய வீ்ரியம், 3. உடம்பினாலாகிய சக்தி வீரியம், 4. தைரியத்தினாலாகிய பராக்ரமவீரியம், 5. மனத்தினாலாகிய த்ருதி1வீரியம் என ஐந்து விதமாகும்.

   இஙகுக் கூறிய ஐந்து ஆசாரங்களும் பிறரால்  ஏற்று நிகழ்வது அரிதாகலின், ‘அருங்கல மொருங்கணிந்தார்’ என்றார்.  குணங்களை  அணிகலனாகக் கூறும் வழக்கினை,

 
‘குணமணி யிலக்க மெண்பத் தீரிரண் டணிந்து கோமான்
 
பணிவினாஞ் சீலமாலை பதினெண்ணா யிரந் தரித்தான்.‘

என்று  (மேரு. 421 ல்) கூறுவதனா லறிக.

ஆசார்ய பரமேஷ்டிகள் இவ் வைந்து வித ஆசாரங்களோடு 28 மூலகுணமும், 36 உத்தரகுணமும்  ஒருங்கு அடைந்திருப்பர்.  இதனை,

‘நாலொன்பது குணமும் நல்லொழுக்க மைந்தினையும்,’ என்னும் ஜீவ சம்போதனைச் செய்யுளாலும்,

 
‘சத்தீஸகுண ஸமக்கோ பஞ்சவிஹாசாரா கரண சந்தரிஸே
 
ஹிஸ்ஸாணுக்கஹ  குசலே தம்மாயிரியே  ஸதா  வந்தே.’

என்னும் (கிரியை ஆசார்ய பக்தி 22-ஆம்) பிராகிருத பத்யத்தாலும் அறியலாம்.

 

*

தபஸ்+ ஆசாரம்-தபாசாரம்,  வினைகளைத் தபிக்கச்  செய்வதனால் ‘தபஸ்‘ எனப்பட்டது

1

த்ருதி யென்பது தைரியத்தைக் குறிக்கும் சொல். சிற்சில வேறுபாடு உண்டு




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:58:48(இந்திய நேரம்)