தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 91 -

(இ-ள்.)அங்க நூல் ஆதி யாவும்-(கணதராதி குருக்கள் விரித்தருளிய) அங்காகமம் முதலிய பலவற்றையும், அரில் தபத் தெரிந்து -குற்ற மறத் தெளிந்து,  தீமைப்பங்கு அவிழ் - தீமைகளின் பிரிவு நீங்கிய (இல்லாத), பங்கம்-சப்தபங்கி நயங்களை, ஆடி-மேற்கொண்டு, பரம  நன்னெறி பயின்றிட்டு-(பஞ்சாசாரம் முதலிய) சிறந்த நல்லொழுக்கங்களிற் பழகி,  அங்க பூவாதி மெய்ந்நூல் அமிழ்து - அங்காகமம் பூர்வாகமம் முதலிய  நாற்பத்திரண்டு வகையான ஆகமங்களின்  அரும்பொருள்களாகிய தருமாமிருதத்தை,  அகப்படுத்து -தம் மனத்துள் தொகுத்தமைத்து,  அடைந்த நங்களுக்கு - தம்மை அடைந்த நமக்கு, அளிக்கும் நீரார் - அளிந்தருளுந்தன்மைய ரான உபாத்தியாய பரமேஷ்டிகளே, நம்வினைகழுவும் நீரார் - நம்வினைகளாகிற அழுக்கினைப்போக்குந்தன்மையுடையார்  (ஆதலின் அவரை - வணங்குவாம்) (எ-று.)

நூல்களின்  கருத்தை ஆய்ந்து அமைத்து உபதேசிக்கும் உபாத்யாயபரமேஷ்டிகளை நினைந்து  துதித்தனரென்க.

நூல்யாவுந் தெரிந்து  தீமைப் பங்கு அவிழ் பங்கமாடி நன்னெறி பயின்று மெய்ந்நூல் அமிழ்து அளிக்கும் நீரார்  என இயைக்க.

அங்கநூல் - அங்காகமம்  என்னும் நூல்.  அது,  ஆசாரம், சூத்ரக்ருதம், ஸ்தானம், ஸமவாயம், வ்யாக்யா ப்ரஜ்ஞப்தி, ஜ்ஞாத்ரு தர்மகதா, உபாஸகாத்யயனம், அந்த க்ருத்தசனம், அநுத்தரோபபாதிகதசகம்,  ப்ரச்ன வியாகரணம், விபாக சூத்ரம் த்ருஷ்டிவாதம் எனப் பன்னிரண்டு வகை.  அவற்றுள் பன்னிரண்டாவதாகிய  த்ருஷ்டிவாதத்தின் பிரிவு ஐந்தனுள் நாலாவதாகிய பூர்வகதம் பதினான்கு வகை ஆகும்.  அவை பூர்வாகமம் எனப்படும். 14-ஆவன-உத்பாத பூர்வம், அக்ராயணீயம், வீர்யானுப்ரவாதம், அஸ்திநாஸ்திப்ரவாதம்,  ஞான ப்ரவாதம், ஸத்யப்ரவாதம், ஆத்மப்ரவாதம்,  கர்மப்ரவாதம் ப்ரத்யாக்யான நாமதேயம், வித்யாநு  வாதம், கல்யாண நாமதேயம்,




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:59:07(இந்திய நேரம்)