Primary tabs
(இ-ள்.) மன்னனும் - மாரிதத்தவரசனும், அதனைக் கேட்டு - அபயருசி கூறியதை (யும் மாந்தர் மகிழ்வுடன் கூறியதையும்) கேட்டு, மனமகிழ்ந்து இனியனாகி - மனமுவந்து இன்பம் உடையனாகி (அவ்விருவரையும் நோக்கி),முன்னர் - முற் பிறப்புகளில், நும் பிறவி இறந்தனஎன்னை - உங்களால் எடுத்துக் கழித்த பிறப்புக்கள் யாவை? பிறந்து நின்ற மன்னிய குலனும் என்னை - இம்மமையில் பிறந்துள்ள நிலைபெற்ற குலம் யாது? வளர் இளம் பருவந்தன்னில் - வளர்தற்குரிய இளம்பருவத்தே, நீர் இனையர் ஆகி வந்ததும் என்னை - நீவிர் இத்தகைய தவவேடம் பூண்டவராகி (இந்நகருக்கு) வந்த காரணமும் யாது? இயம்புக - (எனக்குச்) சொல்வீராக என்றான் -என்றனன். (எ-று.)
மன்னன் வியந்து இளைஞரின் பழம்பிறப்பும், இம்மையில் பிறந்துள்ள குலனும், இளமையில் தவங் கொண்ட காரணமும் யாது என வினவினனென்க.
மன்னன் தன்னைப் போலவே நாட்டுமக்களும் மகிழ்ந்ததற்கு இன்புற்றன னாதலின், ‘மனமகிழ்ந்து‘ என்பதனோடு அமையாது, ‘இனியனாகி‘ என்றுங் கூறினார். என்னை, எவன் என்னுஞ் சொல் ‘ என்’ என்றாகி ஐகாரச்சாரியை பெற்றது. (60)
அபயருசியின்
மறுமொழி
(இ-ள்.) அருளுடை மனத்தர் ஆகி - அருளைமேவிய உள்ளத்தராய், அறம் புரிந்தவர்கட்கு அல்லால் - அறஞ்