Primary tabs
லாம் - தாம் கேட்ட இப்பொருளனைத்தையும், யான் --, நிரை செய்து புகல்வன் - வரிசைப் படுத்தி யுரைப்பன், நீ இது நினைவொடு கேள் - தாங்கள் இதனைக் கருத்துடன்கேட்பீராக, என்றான்-என்று (அபயருசி) கூறினான். (எ-று.)
அரசன் மனம் நல்வழியில் திரும்பியதற்கு வியந்த அபயருசி, அரசே! நீவிர் வினவிய யாவும் கூறுவன் கேட்பீராக வென்றன னென்க.
மாரிதத்தன் மனம் விரைவில் மாறினமைக் குறித்து, ‘அரைச நின் னகத்து மாட்சி யகோ பெரிதழகி தாயிற்று’ என்றான். அங்ஙனம் மாரியது பான்மைக் கால மென்றுணர்ந்த அபயருசி, ‘உரை செய்தா லுறுதியாய துணர்ந்து கொண் டுயர்தி’ என்றான், அரைச - மொழியிடை போலி. தார்மார்ப, வரைசெய் மார்ப என்க. ‘வரைசெய்‘ என்பதில், ‘செய்’ உவம உருபு, போலும்-ஒப்பில்போலி, உரையசை. (64)
இதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின்
பயன் கூறுகின்றார்.
(இ-ள்.) வேந்தே - அரச, இதனை எவ்வளவு கேட்பார்-(யாம் கூறும்) இவ்வற வுரையை (யாவர் சிலர்) எத்துணை நம்பிக்கை வைத்துக் கேட்கின்றார்களோ, அவ்வளவு-அந் நம்பிக்¬è¢குத் தகுந்தவாறு (அந்த அறவுரை), அவருக்கு ஊற்றுச் செறித்து - அவர்களுக்குச் சேரவரும வினைகளின் ஊற்றை அடைத்து, உடன் - உடனே, உதிர்ப்பை ஆக்கும் - பழவினைகளின் உதிர்ப்பையும் அடைவிக்கும் (ஆதலின் அவர்கள்), இருவினை கழுவும் நீரார்-