Primary tabs
மின்னலாகவும், மாரிதத்தனைப் பொன் மலையாகவும், அறவுரையை மழையாகவும் உலமித்துக் கூறினார். கைம்மாறு கருதாமையால், அபயருசிக்கு மேகம் பயன் உவமை, மாரிதத்தன் நிறத்தால் பொன் மலைக்கு உவமையாயினன்.
மலையின் மீது மழை பெய்தால் அம்மலையினுக்கேயன்றி நிலத்தி லுள்ள உயிர்களுக்கும் இன்பம் உண்டாவதுபோல, இவ்வற வுரையால், மாரிதத்தனுடன் உலகமக்களும் நலத்தினை யற்றன ரென்க. அபயருசி அபயமதிஆகிய இருவரும், யசோமதி அரசனுக்கும் அவன் மனைவி புட்பாவலிக்கும் இரட்டைக் குழுவிகளாகப் பிறந்து துறவுபூண்டன ராதலின், ‘மன்னவ குமரன்‘ என்றார் ஆசிரியர். இதன் விவரம் யசோ. 252,3,ல் காண்க. அறவுரையைமழை யென்றதற் கேற்ப, ‘பொழிய லுற்றான்‘ என்றார்.அணைந்து எச்சசத்திரிபு, உருகும் வண்ணம் என்பதற்கு எழுவாய் வருவிக்கப் பட்டது. இனி, அன்ன மென்னமையினாளும் உருகும் வண்ணம் என்று கூறின் அப்பொருள் சிறுவாமை அறிக (63).
(இ-ள்.) அரைச-அரச, நின் அகத்து மாட்சி-நின் மனத்தின் பெருமை, அகோ-ஆச்சரியமானது, பெரிதுஅழகிது ஆயிற்று -(கொலைத் தொழில் புரிய விருந்த அது) மிகவும் அழகியதாக (இது பொழுது) மாறி விட்டது, உரை செய்தால் -(எம்வரலா றனைத்தையும்) மொழிந்தால், உறுதியாயது உணர்ந்து-நின் உயிருக்கு உறுதிப் பொருளைத் தெளிய வுணர்ந்து, கொண்டு-கைக் கொண்டு, உயர்தி - உயர்கதி செல்வாய்; விரை செய்தார் வரை செய்மார்ப-மணங் கமழும் மாலையினையும் மலையினை யொத்த மார்பினையு முடைய வேந்தே, வினவிய பொருளிது எல்