தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 117 -

‘தாதுறக் காய்ந்த  போழ்தின்  தானுறு   நீரை யொத்து‘ என்று (மேரு 97)  கூறியது  காண்க.  ஊற்று போலத் தொடர்ந்து வருவதனால்  அதனை  ஊற்று  என்ப.

அவை பத்துவகைப்படும் இதனை,  ‘ஈனமே  யதிக மீறா பதகமே  சாம்ப ராயம், ஞானமே  ஞான மின்மை  நல்லவாம்புண்ய  பாபம்,  தேனுலா மலங்கல்  வேந்தே தவியமே பாவமென்று,  தானெலா வுயிர்க்கு  மாகு மூற்றிவை  தாம் பத்தாகும். ‘என்னும்  (மேரு.98) செய்யுளா  லறியலாகும்.

செறித்தல் - அடைத்தல், உதிர்த்தல்-நீக்குதல், முக்திக்கு  மாறாகியதனை  மாற்று என்றார்,  இதனை,

 “
மாற்றி னின்றது வையக மூன்றினு
 
மாற்றவும் பரி யட்ட மோ ரைந்தினாற்
 
றோற்றம் வீதற் றொடர்ந் திடையில் வினைக்
 
காற்றினாற் கதி நான்கிற்  சுழலுமே" என்ற (மேரு 71)

செய்யுளா லறியலாகும்.  வினை நீங்கப் பெற்றார், தேவர் இயற்றும் சிறப்புப் பெறுவது மரபு.  இங்ஙனம்முனிவர் முதலியோர்  தேவர்களால் சிறப்பு பெறுவதனையே, ஐந்த வித்தா னாற்ற லகல்  விசும்புளார்  கோமா,  னிந்திரனேசாலுங் கரி.‘  என்று தேவர்  கூறியதற்கு  பொருள்  என்று ஆன்றோர்  கூறுப.  இந்திரன்  முதலியோர்  சிறப்பியற்றுதலை  ஸ்ரீபுராணம்  முதலிய  வற்றுள் காண்க.

இனி, வெருவினர் என்பதற்கு, ‘மாற்றை வெருவின ராகி வீட்டை எய்தும்  செவ்விய  ராகும்படி செய்து நிறுத்தும்‘  எனவும் கூறலாம்.  இப்பொருளில்  வெருவினர்-முற்றெச்சம்.   (65)

69. 
மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு  விகற்பை1 மாற்றும்
 
புலமவி2 போகத் தின்கண் ணாசையை பொன்று விக்கும்
 
கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோ
 
சிலைமலி நுதலி னார்தங் காதலிற் றீமை செப்பும்.3   [லச்

 

1 விருப்பை 

2 புலம் மலி 

3 செய்யும்.

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:03:23(இந்திய நேரம்)