தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 118 -

(இ-ள்.) (இவ்வற வுரையானது.) மலம் மலி-மலம் முதலியன நிறைந்த, குரம்பையின் கண்-உடலினிடத்தே, மனத்து எழும்-மனத்தில் தோன்றும், விகற்பை  மாற்றும்-விகற்பமான (தவறான)  எண்ணங்களை மாற்றி உண்மையை உணரச் செய்யும், போகத்தின்  கண்-போகப்  பொருள்களினிடத்து, புலம் மலி ஆசை-ஐம்புலன்களாலும் நுகருவதற்கு  மிக்கு எழும் ஆசையை,  பொன்றுவிக்கும்-நாசஞ்செய்யும்,  கொலைமலி கொடுமை தன்னை-(பலிமுதலிய)கொலைநிறைந்த  கொடுஞ் செயல்களை, மனத்தில் குறைத்திடும்-மனத்திலும் நிகழா வாறு குறைக்கும்;  கோலம்சிலை மலி நுதலினார்தம் காதலின் தீமை-அழகிய   வில் போலும் புருவங்களை யுடைய தீய மாதர்களின் காதலின் தீமைகளை, செப்பும் - அறிவிக்கும் (எ-று.).

இவ்வற வுரை, உடல் போகம் காமம்  முதலியவற்றில் வெறுப் படையச் செய்யு மென்றென  னென்க.

இவ்வற வுரையைக் கேட்ட மக்கள், தங்கள் உடம்பில் பற்று  வையாது அவைகளை மலபாண்டங்க  ளென்றெண்ணி வெறுப்புக் கொள்வ ரென்பான்,  ‘மலமலிகுரம்பையின்  கண் மனத் தெழு விகற்பை  மாற்றும்‘ என்றான். குரம்பை-குடிசை; மலம் மலி என்றதனால் உடம்பை  உணர்த்திற்று.

70.

‘புழுப் பிண்ட மாகி  புறஞ் செய்யுந்  தூய்மை
 
விழுப் பொருளை வீறழிப்பதாகி - அழுக் கொழுகும்
 
ஒன்பது வாயிற்றா  மூன்குரம்பை  மற்றிதனா
 
வின்பமதா மென்னா  திழித் துவர்மின்‘

                                          (திருக்கலம் - 72.)

என்றார்  உதீசிதேவரும். போகப் பொருள்களினிடத்து எழும் ஆசை பிறவிக்குக் காரண மாதலின்,  அதனை நீக்கி வீடு பேற்றில்  விருப்பத்தை உண்டாக்கு மென்பான், ‘புலம்மலி போகத்தின் கண் ணாசையைப் பொன்றுவிக்கும்‘ என்றான்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:03:33(இந்திய நேரம்)