Primary tabs
மகப்பேறு இல்லாக் குறை, அவ்வொரு குறையும் தீர்ந்தனால், ‘நந்திய புகழவன்'; என்றார். நந்திய-நிறைந்த. ‘நந்தியமதி'; என்று (மேரு. 224-ல்) கூறியது காண்க.
ஐம்பத்து மூன்றுவித கர்ப்பான்வய கிரியை, ஏழுவித கர்த்ருன்வய கிரியை, நாற்பத்தெட்டு வித தீக்ஷான்வயகிரியை ஆகிய இவைகளின் முறைப்படி நடத்தவேண்டிவெள்ளணி விழாக்) கொண்டாடி பெயர் வைப்பது அரசர்க்குச் சிறப்பாகலின், ‘நாம மோதினான்‘ என்று விதந்தோதினார். இந்து, தனயன் என்பன வடசொல். (3)
யசோதரன் மணம்
(இ-ள்.) வளங்கெழு குமரனும்-வளம் பொருந்தியஇளைஞனான யசோதரனும், ஏதம் இன்றி-(பாலாரிஷ்டம்முதலிய) துன்பங்களின்றி, இளங்களிறு உழுவையின் வளர்ந்து-இளங்களிறு போன்ற நடையும் புலிபோன்ற வீரமும் உடையவனாகி வளர்ந்து, மன்னனாய்-இளவரசனாகி விளங்கு இழை அமிழ்தமுன் மதியை-ஒளியுள்ள ஆபரணங்களணிந்த அமிர்தமதி யென்பவளை, வேள்வியால்
உளம் கொளப் புணர்ந்து-ஒள பாசன விதிமுறையால் மனம் கொள்ளுமாறு மணம்புரிந்து கூடி, உடன்-அவளுடன், உவகை எய்தினான்-இன்புற்றான்.(எ-று.)
யசோதரன் அரசர்க்குரிய வளமுடன் வளர்ந்து அமிர்தமதியை மணவேள்வி விதிப்படி மணந்து இன்புற்றனனென்க.
இளங்களிறு நடையினுக்கு உவமையாதலை, ‘மங்கலமழகளி றனைய செல்கையன்'; என்று தோலா மொழித்தேவர் கூறியதனாலறிக. கெழுமுதல். பொருந்துதல்-