Primary tabs
யசோதரனெனுந்தனையனை நிலமகட்டலைவனாகென, களைமணி வனை முடிகவித்து‘ என்று (யசோ. 82-ல்) கூறுவதனால், ஈங்கு ‘மன்னன்‘ என்பதற்கு இளவரசனெனப் பொருள் கொள்ளப்பட்டது. அமிர்தம் என்ற சொல் முன்னாலுடையமதி, அமிர்தமதி. (யசோ. 25)
வேள்வி - திருமணம் முதலிய காலங்களில் சமிதை,முளைக்குஞ்சக்தி யற்ற மூன்று வருஷத்து நெல்லினால் பொரித்த பொரி, நெய் இவற்றைக் கொண்டு செய்யும் ஹோமம். முளைக்குஞ் சக்தியற்ற மூவாண்டு நெல், வடமொழியில் அஜம் எனப்படும். அசம் என்பது மூன்று வருஷத்திய நெல்லைக் குறிக்கும் என்பதனை, ‘அச மூவாண்டுறு நெல்லாடாம்‘ என்ற சூடாமணி (11;9.) நிகண்டினாலறியலாகும். (4)
யசோமதியின் பிறப்பு
யசோதரன் அமிர்த மதியிடம் இன்புற்றிருக்கும்நாளில் யசோமதி யென்ற ஒர் புதல்வன் பிறந்தனனென்க.