Primary tabs
இளமைச் செவ்வியே இன்பம், நுகர் தற்குரிய காலமாதலின், ‘இளையவளெழில் நலம் விழைந்து‘ என்றார். ஏந்து கொங்கை-மார்பிடம் ஏந்திய தனம் எனினுமாம். கிளையவர் அசோகன் முதலியோர். இதனால் அசோகனுக்கு யாதொரு குறையு மிலதாயிற் றென்க.
இதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்.
யுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன்.(இ-ள்.) ஓர் நாள் - இவ்வாறு செல்லுங் காலத்துஒரு நாள், கண்ணடி பற்றுவான் அடிதொழ - கண்ணாடி ஏந்திக் காட்டுவோன் அசோக மன்னனுக்கு வணங்கிஎடுத்துக் காட்ட, மன்னவன் மகிழ்ந்து --, படிவம் நோக்குவான் - தன் வடிவத்தை கண்ணாடியில் காண்பவன், வார்குழல் - தனது நீண்ட தலைமயிரில், ஒற்றை மயிர் உச்சி - ஒரு மயிரின் முனையில் (உள்ள), வெண்மையை உற்று - நரையைக் கண்டு, உறாவகை அதை - இளமை நிலையாமையையும், முதுமை வந்து விட்டதையும், உளைந்து கண்டனன் - மனம் வருந்தி அறிந்தனன். (எ-று.)
அசோகன், தனது நரைமயிர், முதுமையை உணர்த்தவருந்தினானென்க.
மகிழ்ச்சி - பெயரன் பிறந்து வளர்வதற்குத் தானும் மகிழ்தல். கண்ணாடி ‘கண்ணாடி‘ என நின்றது விகாரம். (சீவக - 629,1082.) அரசரின் குற்றேவ லாளருள் கண்ணாடி ஏந்துவோர் ஒருவகையினர். படிவம் - வடிவம்.உச்சி - தன் சிரசின் உச்சி (யிலுள்ளமயிர்) எனினுமாம்.‘உறாவகை‘ (இளமை நிலையாகப்) பொருந்தாத வகை, ‘அதை‘ குறிப்பால் மூப்பை உணர்த்திற்று. ஊறுதல்-