Primary tabs
மனிதர்களுக்கு, மகளிர் வெறுக்கத் தக்க மூப்பு வராமல்
இளமை உண்டு என்று கூறும் வரையிற்றான் காமனுடைய புட்ப பாணங்கள் காம வேட்கை யாகிய
பயனைஅளிக்கும் எனறு அசோகன் எண்ணினனென்க.
‘மேனிக்கு வண்தளிர் உவமை காட்டுவதனால், ஈண்டு ‘வண்தளிர்‘ மாந்தளிராயிற்று, புரை-உவமவுருபு. கண்டோரால் காதலிக்கப் படுதலால், ‘திருமேனி‘ என்றார்.கழியமூப்பு - மிக்க மூப்பு; ஆண்டு மிக்க மூப்பு, இதனை;கையிற்றொழுதார் கழிய முப்பிற் செவி கேளார்,‘ என்ற(சீவக-2013-ம்) செய்யுளாலறிக. வண்டுகள் உள கணை-பூங்கணை. பூங்கணை கூறியதனால் வில்-கரும்பு வில் எனப்பட்டது. அக் கரும்பு வில்லை யுடையவன் மன்மதன். ஆகலின், வில்லி என்பது மன்மதனைக் குறித்தது. உருவிலா மன்மதனுக்கு உருவமுள்ள வில், என்லு மொன்று, முதுமை யெய்திடின் மாதரும் விரும்பார் மன்மதபாணமும் வருத்தாதென்பதாம். மகளிர் விரும்பாமையை,
நாலடியாரால் (இளமை, 2-ல்) உணரலாம். (7)
துறவின் இன்றியமையாமை
(இ-ள்) இளமையின் இயல்பு - இளம்பருவத்தின் தன்மை, இது ஆய என்னின் - (நிலையாமையாகிய) இவ்வண்ணமான தென்றால், இவ்வளமை இல் இளமையை