Primary tabs
இவ்வளப்பமில்லாத இளம் பருவத்தை, மனத்து வைப்பது என்- (நாம்) மனத்தில் மதித்துப் போற்றுதலால் யாது பயன், கிளைமையும் அனையதே - சுற்றத்தினரின் இயல்பும் (நிலைமையாமை யுடைய) அத்தகையதே (ஆகலின்), இனி-இனியாகிலும், நம் உளம் கெழுமும் - நம் மனத்தே பொருந்தியுள்ள. தளைமையை - பாச (பந்த)த்தை, விடுவதுஏ தகுவது ஆம் - விட்டு விலகுவதே தக்கதாம். (எ-று.)
நிலை பேறில்லாத இளமை, கிளைமை முதலியவற்றை நிலையெனக்கருதாமல் நிலைபெற்ற தவத்தை கருதுவாமென உனின னென்க.
கிழத்தனம் வருதற்கு முன்பே தவத்தின் மேற்சென்று நல்வினை தேடவேண்டும் என்ற முதுமொழிப்படி அசோகனும் உன்னினானென அறிக. சுற்றத்தினரின் நிலையாமையையும்,
ஏகாரம் இரண்டும் தேற்றம் கெழுமுதல் - பொருந்துதல். தளை-கட்டு; பிணித்தல் (8)
(இ-ள்.) முந்து செய் நல்வினை - முற்பிறப்பில் நாம்செய்த நல்வினைகள், முளைப்ப-உதயமாக (அதனால்), இத்தலை-இப்பிறப்பில், சிந்தை செய் பொருளொடு-நாம் பெறக்கருதிய பொருள் எல்லாவற்றுடனும், செல்வம் - அரச