Primary tabs
பின்னர் உண்டாகும் பழிச்சொல்லுக்கு அஞ்சமாட்டா; பெருமை பேணா - பெருமையையும் காப்பாற்றா; என்னும் இம் மொழிகட்கு - என்று கூறும் இச் சொற்களுக்கு, இலக்கியமாயினாள் - இவ் வமிர்தமதியே எடுத்துக்காட்டாக ஆயினாள். அந்தோ - ஐயோ! (எ-று.)
அரசி, தன் மனநிறை தவறினதனால், ‘மின்னினும் நிலையின் றுள்ளம்‘ என்றும், நன்மைதீமையைப் பகுத்தறியாது நினைத்ததை அடையத் துணிகின்றாளாதலின், ‘விழைவுறின் விழைந்த யாவும் துன்னிடும'; என்றும், பாடினவன் யாவன் என்று ஆலோசனை செய்யாமையால், ‘ மனத்தின் தூய்மை சூழ்ச்சியும் ஒழிய நிற்கும்‘ என்றும், பிறனோடு சேருதல் பழியாகு மென் றஞ்சாததனால், ‘பின்னுறு பழியிற் கஞ்சா‘ என்றும், தான் ஒரு சிறந்த அரசி யென்ற பெருமையைக் கருதாமையால், பெருமை பேணா‘ என்றுங் கூறினார் என்க. இது, தீய பெண்களை இழித்துக் கூறியது.
குணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல்
(இ-ள்.) துன்னி இரவு நீங்க -செறிந்த அவ்விரவு கழிய, துணைமுலை -அமிர்தமதி, தமியளாகி - தனித்தவளாகி, இன் இசையவனை -இனிய கீதம் பாடியவனை, நெஞ்சத்து - தன் மனத்தில், இருத்தினன் - காதலனாகப் பதித்துக்கொண்டு, இருந்த எல்லை -இருந்த சமயத்தில், தோழி துன்னினள் - தோழியாகிய குணவதி அவளிடம் வந்து, துன்னி - நெருங்கி, ‘இறைவி - அரசியே, நீ துணைவர் இல் தமியர்ஏ போன்று -நீ தலைவரைப் பிரிந்து தனித்திருக்கின்ற மகளிரைப் போல், உள்ளத்து - (நின்)மனத்தில், நினைந்தது என் - நினைத்தது என்ன? இது