Primary tabs
அருளுக என்றாள் - இதனைத் தெரிவிப்பாயாக‘ என்று வேண்டினாள்; (எ-று.)
அமிர்தமதி தனித்திருந்த காலத்தில் உயிர்த்தோழி அவளை நெருங்கி, ‘நீ தனித்து வருந்தக் காரணம் யாது?‘ என்று வினவினாள் என்க.
‘துணைமுலை’ என்பது பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழிக்தொகை. ‘இருந்தினன்‘ என்பது முற்றெச்சம். (24)
அரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்
(இ-ள்.) ‘எல்லி - கடந்த இரவில், ஒருவன்- --, பவள வாய் -(தன்னுடைய) சிவந்த வாயாகிய, மணிக் கைகொண்ட -அழகிய கையிடத்தே பிடித்துள்ள, பண் இயல்-கீதத்தா லியன்ற, தோட்டிபற்றி -அங்குசத்தைக்கொண்டு, தவழும் மாமதி செய் தண்தார் - ஊர்ந்து செல்லுகின்ற சிறந்த சந்திரனைப் போனற் குளிர்ச்சியுடைய மலர்மாலை யணிந்த, மன்னவன் - யசோதர மன்னனது, தகைமை என்னும் - பெருந்தகைமை யென்கின்ற, கவளம் ஆர்-கவளத்தை விரும்புயுண்ணுகின்ற, அகத்து - இடத்தையுடைய, என் உள்ளம்-என் மனமாகிய,கருங் களி மத நல் யானை -கருநிறமுடையதும் களிப்பிற்குக் காரணமான மதத்தையுடையதும் ஆகிய யானை, நோவ துவளுமாறு -துன்புற வாடும்படி, தொடங்கினன் என்றாள் -ஆரம்பித்தான்‘ என்றாள்; (எ-று.)
அமிர்தமதி ‘ஒருவன் என் மனமாகிய யானையைத் தன் கீத மென்னும் அங்குசத்தால் துன்புறுத்தத் தொடங்கினான்‘ என்று தோழியிடம் கூறினா னென்க.