Primary tabs
கவளம் கொள்ளும் யானையைப் பாகன் அங்குசத்தால் அடக்குமாறுபோல, இங்கு அரசனின்பத்தைத்துய்த்த அமிர்தமதியின் மனத்தை ஒருவன் கீதத்தால் கவர்ந்தான் என்க. அரசனுடைய தகைமையைக் கவளமாகவும், அமிர்தமதியின் உள்ளத்தை மதக்களிப்புள்ள யானையாகவும், பாடியவனைப் பாகனாகவும், அவன்வாயைக்கையாகவும், கீதத்தை அங்குச மாகவும் உருவகஞ் செய்துள்ளா ராதலின், இச் செய்யுள் முற்றுருவக மெனப்படும். ‘நோவ துவளுமாறு தொடங்கினான்‘ என்றதனால், மெலிதற் குரிய மார்க்கத்தைக் கையாண்டானென்பது பெறப்படும். யானை இசைக்கு வணங்குக் தன்மையுடைய தாகலின், இசையி லீடுபட்ட அவள்மனத்தை யானையாக உருவகித்தாள். யானையின் ஒருவாயுணவிற்குக் கவளம் என்று பெயர். ஆர்தல் - உண்ணல், மாமதி - முழுச்சந்திரன். செய், உவமவுருபு. (25)
தோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல்.
(இ-ள்.) கொங்கு அவிழ் குழலி அக் குணவதி- வாசனை வீசும் மலரணிந்த கூந்தலை யுடையவளாகிய குணவதி யென்னும் அத் தோழி, அங்கு - அவ்விடத்து, அவள் அகத்துச் செய்கை -அவ் வமிர்தமதியின் மனத்துச் செயலை, அறிந்தனள் - தெளிவாக உணர்ந்துகொண்டாள் (ஆயினும்), அல்லளே போல் - (அச் செயலை) அறிந்து கொள்ளாதவள் போல, பிறிது கூறும் - வேறோன்றாக மாற்றிக் கூறுவாள்; ‘ நங்கை -சிறந்தவளே, கனவிற் கண்ட -கனவிடத்துக் கண்டதாகிய, பங்கமது - இழிந்த பொருளை, நனவு என உள்ளி - நேரில் கண்டதாகக் கருதி உள்ளம
1 பாடம் ளல்லவே.
2 பிறிந்து