Primary tabs
பரிவு கொண்டனை என் - நின் உள்ளத்துக் துன்புற்றது என்ன? நின் பெருமை நன்றே - நின்னுடைய பெருமை நன்று‘ என்றாள் - என்று கூறினாள்; (எ-று.)
குணவதி, அரசியின் கருத்தை அறிந்தாளாயினும், அதனை மாற்றக் கருதி, தான் அறியாதாள்போல் பிறிது கூறினா ளென்க.
‘அறிந்தனளல்லள்‘ என்பதை உரு சொல்லாகக் கொள்ளலும் ஆம். மற்று, அசை, நனவு - விழிப்பு, ஜாக்ரதை. (26)
அரசி
மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக்
கூற, தோழி அஞ்சுதல்.
(இ-ள்.) (அமிர்தமதி தோழியை நோக்கி) ‘என்மனத்து இவரும் - என் மனத்தில் படர்கின்ற, என் நோய் - எனது காமநோயை, இவண் - இவ்விடத்தில், அறிந்திலைகொல் என்று -(நீ) தெரிந்துகொள்ளவில்லைபோலும்‘ என்று சொல்லி, அவட்கு - அத் தோழிக்கு, தன் மனத்தினை- தன் உள்ளக்கருத்தினை, உரைத்திடுதலோடும் - வெளிப்படையாகக் கூறியவுடனே, (அவள்), செவி புதைத்து - (தன்) இருகாதுகளையும் பொத்திக்கொண்டு, ‘சில் மலர் குழலி - சிலவாகிய மலரை யணிந்த கூந்தலையுடைய அரசியே, நின் மனத்து - உன் மனத்தில், இலாத - பொருந்தி யில்லாத, சொல்லை -இழிசொல்லை, நீ புனைந்து அருளிற்று - நீயே கற்பனையாகச் சொல்லியது, என் கொல் - என்ன காரணம்? என்று இனிது சொன்னாள் - என்று இனிதாகச்சொன்னாள்; (எ-று.)
1 பாடம் இவளறிந்.
2 யன்றே