Primary tabs
நடையோன்; நைந்த திரங்கிய விரலன் கையன் - நைந்து சுருங்கிய விரலும் கையும் உடையோன்; சிறுமுகன் - சிறிய முகத்தோன்; சினவு சீர் இல் குரங்கினை அனைய கூனன் - கோபங்கொண்ட அழகற்ற குரங்கினைப் போன்ற கூனன்; குழிந்துபுக்கு அழிந்த கண்ணன் - உட்குழிந்து அழிந்த கண்ணையுடையோன் ; (அவனுக்கு), சிலபல் நெருங்கலும் நிரலும் இன்றி நிமிர்ந்து உள - சிலபற்கள் நெருக்கமும் வரிசையு மின்றி வளர்ந்துள்ளன ‘ என்றாள் - என்று சொன்னாள்; (எ-று.)
அவள் இவ்வெட்டு விதப் பங்கங்களை யுடையோன் என்றாள்.
எட்டுவிதப் பங்கங்கள் - (1) உடலில் நரம்புகள் முடிச்சுப்போல் கட்டிக்கொண்டிருத்தல். (2) கழுதையின் நடையுடைமை, (3) நைந்து திரங்கிய விரலுடைமை, (4)நைந்து திரங்கிய கையுடைமை, (5) சிறுமுகமுடைமை, (6) சீர்மையின்றிக் குரங்குபோன்ற கூனுடைமை (7) குழிந்து புக்கழிந்த கண்ணுடைமை, (8) நெருங்கி நிரல் படாது நிமிர்ந்த பல்லுடைமை யென்பன நடக்கும்போது முழங்கால்கள் தட்டுவதனால் ‘நடையினிற் கழுதை’ என்றாள். இனி, சினவி சிறு முகன் எனினுமாம். ஏ, அசை. (32)
(இ-ள்.) கோது அவிழ்ந்திட்ட உள்ளம் - குற்றம் நீங்கியமனத்தையுடைய. கொம்புஅனாள் - பூங்கொம்பு போன்ற, குணவதி - குணவதி யென்பாள், (பின்னும் அமிர்தமதியை நோக்கி), ‘ பூதிகந்தத்தின் மெய்யில் - முடைநாற்றம் வீசுகின்ற அவனுடம்பில், புண்களும் கண்கள் கொள்ளா - (தொழுநோயால் உண்டான ) புண்களைக் கண்கள் பார்க்கவும் சகியா ; சாதியும் தக்கது அன்று-