தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 152 -

(இ-ள்.) ‘மன்னன் மாதேவி - கோப்பெருந்தேவியே, நின்னை வருத்துவான் - உன்னைத்  துன்புறுத்துவதற்காக, வகுத்த கீதத்து அன்னவன் - அமைத்துப் பாடிய இசையினையுடைய அவன், அத்தி பாகன் - நம் யானைப்பாகனாகிய, அட்டபங்கள் என்பான் - அஷ்டபங்க னென்பவன்; தன்னை -அவனை, மெய் தெரியக்கண்டு - உடல்முழுவதும் விளங்கப்பார்த்து, தளர்ந்து - உளம் சோர்ந்து, கண் புதைத்து மீண்டேன் - (அவனைக் கண்ட)  என் கண்களைக் கைகளால் பொத்திக்கொண்டு திரும்பிவிட்டேன்;  என்னை நீ முனிதி என்றிட்டு - என்னை நீ வெறுப்பா யென்று உட்கொண்டு, அவற்கு -அப் பாகனுக்கு,  ஈது- (யான்சென்ற) இவ் விஷயத்தை, இசைக்கலன் - சொல்லாதொழிந்தேன்‘ என்றாள் - என்று  குணவதி கூறினாள்; (எ-று.)

‘தேவியே, அஷ்டபங்கனைக் கண்டேன்.  அவனுருவினை நீ காண்பாயாயின் உடனே நீ வெறுத்து நீக்குவாய்.  அத்தன்மையோனுக்கு  நின் கருத்தினைத் தெரிவிப்பின்  நீ என்னை முனிவா யென் றஞ்சி ஒன்றும்  உரையாடாது திரும்பினேன் என்றா ளென்க.

தெரிதல் - ஆராய்தல்.         முனிதல் - சினத்தலுமாம்.‘

என்றிட்டு, இடு;  துணைவினை அட்டமா பங்கன்; மா, அசை.  அட்டபங்கன் - அஷ்டபங்கன்.  அஷ்ட  பங்கம் -எண்வகைக்குறைவு.  அவை இன்னவை யென்பது  அடுத்த செய்யுளிற் கூறப்படும்.                  (31)

104.
நரம்புகள் விசித்த மெய்ய னடையினில்1 கழுதை  நைந்தே
 
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரிற்2
 
குரங்கினை யனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன்
 
நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள்.

(இ-ள்.) ‘(அவன்), நரம்புகள் விசித்த மெய்யன் - முடிகளாகக் கட்டிக்கொண்டுள்ள நரம்புகளோடு கூடிய  உடலை யுடையோன்; நடையினில்  கழுதை -கழுதைநடைபோன்ற

1 கழுது.

2 சீறிற.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:09:06(இந்திய நேரம்)