Primary tabs
மேலாரணங்கனார் என்றது -மேன்மையுள்ள மகளிரை. இனி, ’ஆடவர் அன்றி -ஆண்மக்களேயல்லாமல், அணங்க னாரும்-மகளிரும், மேலார் அருவருத்து கூடலர்-கூடுதற்குரிய மேன்மைவாய்ந்த மணாளர்களை வெறுப்புற்றுக்கூடாதவர்களாகி, எனலுமாம். நோன்மை -தவம் பெருமகள் என்றது, இகழ்ச்சிக்குறிப்பு; இனி, மூதேவி யெனலுமாம். கூடலர், முற்றெச்சம். குழலி, அரசி எனி்னும் ஆம். (37)
(இ-ள்.) கனிபுரை கிளவி - கனிபோலும் இனிய சொற்களையுடைய அமிர்தமதி, இகுளையான் தரப்படும் -தோழியால் சேர்க்கப்படட், சாரனோடு-சோரமநாயகனோடு,காமம் கனிந்து-காதல் முதிரப்பெற்று, தனிவயின்- தனியான இடத்தி்ல், கலந்தனன் -கூடிக் கலந்து, செல்நாள் -ஒழுகுகின்ற காலத்தில், மன்னன்-அரசன் தன்மேல்முறுகினள்-(கணவனாகிய) தன்மீது (காதலின்றி) சினமுடையவளாய், ஒழுகும்-ஒழுகுகின்றாள்; முன்போல்-பழையபடி, இனியவள் அல்லள்-இனியவளாய் இருக்கவில்லை; முனி வினை என்கொல்-வெறுத்தற்கு (க்காரணமாகிய) செயல் யாதோ? என-என்று, மனத்து எண்ணினான்-தன்மனத்தில் சிந்தித்தான்; (எ-று.)
கனிபுரை கிளவி சாரனோடு கலந்து செல்லுங்கால், அரசன் ‘என்மீது விருப்பின்றி நடக்கின்றாள். இதற்குக் காரணம் யாது?‘ என்று எண்ணினா னென்க.
கலந்தனள், முறுகினள் என்பன முற்றெச்சங்கள்; அவைமுறையே செல்நாள், ஒழுகும் என்ற வினைகளைக் கொண்டு முடிந்தன. ‘முனி வினை மன்னன்‘ என்பதற்கு,
1 சென்றாள்.