Primary tabs
திருவைப் போன்ற தேவியையும், நாயைப் போன்ற பாகனையும் ஒருசேர மனத்தால் நோக்கி, அவர்தம் கூட்டுறவுக்குக் தோழி வருந்தினா ளென்க.
ஈண்டு ‘ஆவி செல்கின்ற வெந்நோய'; என்றது தொழு நோயை ‘குட்டமாகிய மேனி'; (209) என்பர் முன்னரும். பூவின்; இன், தவிர்வழிச் சாரியை. (36)
இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின்
வாயிலாகக் கூறுகின்றார்.
(இ-ள்.) ‘ஆடவர் அன்றி - ஆண்மக்களேயல்லாமல், மேலார் அணங்கனாரும்-மேன்மை வாய்ந்த மகளிரும், அருவருத்து-இவளால்உலகவாழ்க்கையில் வெறுப்புற்று, கூடலர் - (இல்வாழ்க்கையில்) சேராதவர்களாகி, துறந்து-றவுபூண்டு,
நோன்மைக் குணம் புரிந்து-தவத்தோர்தன்மையை மேற்கொண்டு, உயர்தற்காக -நற்பேறு பெறுதற்காக, பீடுஉடை அயனார்-பெருமை பொருந்திய பிரமதேவன்,
தந்த-படைத்த, பெருமகள் இவள் - பெருமாட்டி யாவாள் இவள், என்று --, தோடு அலர் குழலிதோழி-இதழ்விரிந்த பூவினைச் சூடிய குழலாளாகிய தோழி, உள்ளே துணிந்தனள் - மனம் துணிந்தவளாகி, பெயர்த்து - மறுபடியும், சென்றாள் - (அட்டபங்களிடம்) சென்றாள்; (எ-று.)
“உலகிலுள்ள ஆண் பெண் ஆகிய இருபாலரும் உலகவாழ்க்கையை வெறுத்துத் துறத்தல் வேண்டும் என்ற நோக்கத்துடனே இவ் வரசியைப் பிரமன் படைத் திருக்க வேண்டும்” என்ற தோழி நினைத்துக்கொண்டு,மீண்டும் அப் பாகனிடம் சென்றா ளென்க
1 அணங்கனாரைக்.