Primary tabs
மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்.
(இ-ள்.) மன்னன் - அரசன், துயிலினை ஒருவி- (பொய்த்) துயி்லை நீக்கி, சுடர் கதிர் வாள் கையேந்தி-ஒளி மிகும் வாளைக் கையிலே தாங்கிக்கொண்டு, ‘ஆங்கண் செயலினை -அவ்விடத்திய நிகழ்ச்சியை, அறிதும் என்று- அறிந்துகொள்வோம்';என்று எண்ணி, கயல் விழியவள் பின்னே -கயல்போலும் கண்களை யுடையளாகிய அமிர்தமதியின் பின்னால், மயிலினை வழிச் செல்கின்ற- மயிலுக்குப் பின்னே போகின்றதொரு, வாள் அரி ஏறு போல -ஒளிபொருந்திய ஆண்சிங்கத்தைப் போல, கரந்தனன் ஒதுங்கி - மறைவாய் நடந்து, செறிந்தனன்-ஒடுங்கி, மறைந்து நின்றான்-ஒருபுறமாக மறைந்து நின்றான்; (எ-று.)
மன்னன், ‘தேவியின் செயலினை அறிதும'; என்று எழுந்து வாளேந்தித் தொடர்ந்துசென்று மறைந்து நின்றான் எனக்.
‘தன் உருவம் வெளியாருக்குக் காட்டாது சென்றதைக் ‘கரந்தனன'; என்றும், இருளில்(வேறுபொருள்களிடத்து) ஒன்றிநின்றதைச் ‘செறிந்து'; என்றும், அவர்களிருந்த இடத்தினைச் அணுகி ஒதுங்கி இருந்ததை, ‘மறைந்து'; என்றும் கூறினார். (40)
அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்