Primary tabs
உம்மை இறந்தது தழீஇய எச்சம். நல்வினையாளரிடம் அவ் வினைக்கேற்ப அமையும் மண்மடந்தை, நல்வினையிருக்குந்துணையும் உடனிருந்து அஃது உலந்தக்கால் தானும் நீங்கும், ஆகலின், ‘புணர்ந்து நீங்கும்‘ என்றார்.‘பெண்ணியலது‘ அது, பகுதிப்பொருள் விகுதி என்பர்;முதல் வேற்றுமைச் சொல்லுருபு எனலாம். மனைவியும் அரசாட்சியும் தனக்கு வேண்டுவன அல்ல என்றலை வலியுறுத்துவான் ‘இவர்கள் பெயர்க‘ என்றும்,‘யாமும் துறப்பதே கருமம்‘ என்றும் கூறினான். ‘என்பொடு மிடைந்த காம மிழிபொடு வெறுத்து நின்றான், அன்புடை யரிவை கூட்டம் பிறனுழைக் கண்ட தொத்தே‘என்ற (சீவக. 2725) செய்யுளோடு ஒருசார் ஒப்புநோக்கத் தக்கது. பூமியைப் பெண் என்றும் அரசருக்கு மனைவி என்றும் கூறுவது வழக்கு.
என்னுஞ் செய்யுள் ஈண்டு நோக்கற்பாலது. இனி,கண்ணிய என்பதற்கு மேன்மையாகக் கருதிய எனினுமாம்.நீங்கும்‘ என்னும் முற்று, பெண்பாற்கு வந்தது. மற்று, வினைமாற்று. (50)
மன்னன் தன்உள்ளக் கிடக்கையை மறைத்திருத்தல்.
(இ-ள்.) மற்றைநாள்-மறுநாள், மன்னன் - யசோதரன், துணிவு இலன் - துறவுள்ளத்தில் துணிவு இல்லாதவன்போல ஆகி, மறை-தான் அறிந்த இரஹஸ்யம், புறம