Primary tabs
படாமை-வெளிக்குத் தோன்றாவண்ணம், முன்போல்-பழைய படியே, இன்பச் சுற்றம் ஆயவர்கள்-இனிமை விளைக்கின்ற பணிமகளிர் முதலிய பரிவாரத்தினர், சூழ - தன்னைச்சூழ்ந்திருக்க, இருந்த எல்லை - வீற்றிருந்த சமயத்தில், கற்றை
வார் குழலி-தொகுதியாய் நீண்ட கூந்தலையுடைய, மன்னன்மாதேவி - அரசன் பட்டமகிஷி (அமிர்தமதி), மரபின் - வழக்கம்போல், வருமுறைவந்து - வரும் முறைப்படிவந்து, காவலன் பால்-அரசன்பக்கத்தில் (அர்த்தாசனத்தில்), மெல்ல இருந்தாள் - அமர்ந்திருத்தாள். (எ-று.)
மன்னன் பரிவாரஞ் சூழ இருந்த போது, அரசிவந்து அவனருகில் இருந்தாளென்க.
மன்னன் அரசியின் ளவொழுக்கத்தைத்தானறிந்து வெளிப்படாதவாறு அடக்கிக்கொண்டு இருந்தானாகலின், அதனை ‘மறை'; என்றும், அதனை வெளிக்குக்காட்டினன் அல்லனாகலின், ‘புறப்பாடாமை'; என்றும் கூறினார். இனி, துறவுக்குச் செல்ல எண்ணியிருந்ததை‘மறை'; என்றார் எனவுமாம், மற்றை என்பதில், ஐ சாரியை. (51)
இதுவுமது
(இ-ள்.)
நரபதி - அரசன், விரகில் நின்று - தந்திரமாயிருந்து, மிகைவிளைகின்ற நகை விளையாடல்
மேவி - மிகுதியாகின்ற புன்சிரிப்பொடு விளையாட்டை மேற்கொண்டு, நீலமலரினின் -
கருங்குவளைப்பூவினால், வீசலோடும் - விளையாட்டாக அடித்தவுடனே, புகை கமழ் குழலி-அகிற்புகை
மணக்குங் கூந்தலாளாகிய அமிர்தமதி, சோர்ந்து - (அதனைப் பொறாதவள் போல்) தளர்ந்து,
பொய்யினால் - பொய் நடிப்பாக, மெய்யை வீழ்த்தாள் - (தன்) உடல் தரையிற்பட
வீழ்ந்துவிட்டாள்; மிகை கமழ்-அதிகமாகப் பரி