Primary tabs
மளிக்கினற், நீரில்-பனிநீர் முதலியவற்றால், தேற்ற - (சேடியர்) தேற்ற, மெல்லிய-மென்மையான இயல்பினையுடைய அவள், தேறினாள்-தெளிவுற்றாள். (எ-று.)
நரபதி, கையிலிருந்த நீலமலரால் மெதுவாக அடிக்க,அமிர்தமதி அதனைத் தாங்காதவள்போலப் பொய்யாகச் சோர்வுற்று வீழ்ந்துவிட்டாள்; பின்னர், சேடியர் தேற்றத் தெளிந்தெழுந்தாள் என்க.
நரபதி, தேவியின்பால் உண்மையில் அன்புடையான்அல்லனாகியும் அன்புடையான் போன்ற நடித்தலின், ‘விரகின் நின்று‘ என்றார். இனி, தனக்குத் துறவு உட் கோ ளாயினும் அது வெளித்தோன்றாவாறு ஒழுகினானாகலின், விரகினின்றா னென்னலாம். ‘மிகை விளைகின்ற நீலமலரின்‘ என்று நேரே உரைப்பினுமாம். மெல்லியல் என்றது இகழ்ச்சிக்குறிப்பு. நரபதி - நரருக்குப்பதி; அரசன். (52)
இதுவுமது.
(இ-ள்.) மன்னன்-(அதனைக் கண்ட) அரசன், புரைபுரை தோறும் -இதழ்களின் இடையேயுள்ள துவாரந் தோறும், நீர் சோர் - நீ்ர்பொசிகின்ற, பொள்ளல் உருவிற்று ஆய - தொளையுள்ள உருவமுடைய தாகிய, இ இருநிறமலரினால்-இந்தக் கருநிறம் வாய்ந்த நீலோற்பல மலரினால்,
இன்று -, இவளுயிர் ஏகலுற்றது - இவளுடைய உயிர் (உடலைவிட்டுப்) போகத்தொடங்கியது, அரிதினில் வந்தது-அருமையாக மீண்டது, என்று-,
அவளுடன் - அவ்வமிர்தமதியோடு, அசதியாடி - பரிகாசஞ் செய்து, விரகினில்விடுத்து - (அவளை) உபாயத்தினால் அங்கு விட்டு, வெய்துயிர்த்தனன்
இருந்தான் - (அவள் தன்மையை நினைந்து) பெருமூச் செறிந்தவனாய்த் தனித்திருந்தான். (எ-று.)