தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 180 -

வினை” என்னுந் தேவர் குறளும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலன.  காவலன் என்பது உலக மக்களையும் ஏனைய உயிர்களையும் துன்பம் அணுகாவண்ணங் காப்பவன் என்னும் பொருளது.  இறைவி, விளி,  தான், அசை.    (61)

134. 
யானுயிர் வாழ்த லெண்ணி யெளியவர் தம்மைக் கொல்
 
வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி   (லின்
 
ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி
 
மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே.

(இ-ள்.) யான் உயிர் வாழ்தல் எண்ணி - யான் (மட்டிலும்) உயிர் வாழ்தலைக் கருதி,  எளியவர் தம்மைக்கொல்லின் - (யான் அளிக்கத் தக்க) எளிய உயிர்களைக் கொல்வேனாயின், மேல் - மறுமைக்கண்,  வான் உயர்

இன்பம் - தேவருலகில் பெறும் உயர்ந்த இன்பம்,  வரும் நெறி திரியும் - (என்னை) வந்தடைதற்குரிய நெறி மாறிநீங்கி விடும்; அன்றி - அன்றியும், ஊன் உயிர் இன்பம் எண்ணி - உடம்போடு கூடி உயிர் நுகரும் இன்பம் ஒன்றையே நிலையெனக் கருதி, எண்ணம் மற்றொன்றும் இன்றி - சிறந்த நினைவு வேறெதுவுமின்றி, மானுயர் வாழ்வு - மக்கள் வாழ்தல், மண்ணில் - --, மரித்திடும் இயல்பிற்று அன்றே- அழிந்தொழியும் தன்மையதுஅன்றோ? (எ-று.)

தீய நினைவும் செயலுமுடையார் நற்பேறு அடையார் என்றானென்க.

தம் உயிரைக் காத்தற்கு அறிவிலிகளின் சொல்லை மெய்யென்று நம்பி, எளிய வுயிர்களைப் பலியிடுவோர், மறுமையில் அத்தீவினைகளினால்   நரகத்தில் துன்புறுதலன்றி வானுலகத்து இன்பம் எய்தாராகலின், ‘யான்...திரியும்‘ என்றான்.  எளியவர் என்று உயர்திணையாகக் கூறினாரேனும்,  அஃறினை யுயிர்களையும் குறிக்கும்; ‘ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும்,  வருவதுதானே வழக்கென மொழிப‘ என்பது விதி.  வானுயர்இன்பம் - முக்தியுமாம்.  நல்லறிவு நற்காட்சியின் பயனான
 



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:13:39(இந்திய நேரம்)