தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 181 -

வீடுபேறே  எண்ணக் கடவதென உணர்த்தவேண்டி,‘எண்ணமற் றொன்றுமின்றி';  என்றான்.  மறுமையின்பம்எய்தாமையேயன்றி இம்மை யின்பமும் கெடுமென்பான், “மானுயர் வாழ்வு மண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே” என்றான்.               (62)

135. 
அன்றியு முன்னின்1 முன்ன ரன்னைநின் குலத்து ளோர்கள்
 
கொன்றுயிர் கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லர்
 
இன்றுயிர் கொன்ற பாவத் திடர்பல விளையு மேலால்
 
நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம்.

(இ-ள்.) அன்னை -தாயே, அன்றியும் - அதுவன்றியும், உன்னின் முன்னர் - உனக்கு முன், நின் குலத்து உளோர்கள் - உன் குலத்துதித்த முன்னோர்கள், உயிர்கொன்று  கன்றும் உள்ளம்  - பல் உயிர்களையும்கொன்று   அச்செயலில் அடிப்பட்ட  உள்ளத்தோடு,கொடுமை செய் தொழிலர்  அல்லர் - தீமை செய்யுந் தொழிலையுடையவர்  அல்லர்; இன்று உயிர்  கொன்ற பாவத்து-(நின் சொற்படி) இப்பொழுது உயிரைக் கொன்ற பாவத்தால்,  நமக்கு - --, மேலால் இடர் பல விளையும் - பின்னர்த் துன்பங்கள் பல உண்டாகும்;  (ஆதலின்), நீஅருளிற்றெல்லாம் - நீ கூறிய இவை அனைத்தும்,  நன்றிஒன்று அன்று -நன்மை தருவதொன்று அன்று. (எ-று.)

முன்னோர் யாருமே செய்யாத இக் கொலைத்தொழிலைச் செய்யும்படி சொல்லுகின்றாயே!  இச்செயல் தீமையே தரும், நன்மை தாராது என்றானென்க.

‘உன்னின் முன்னர்...தொழில ரல்லல்';  என்றதனால் ‘நீயும் அவ்வாறே ஒழுகத் தக்கவள், நீ இது சொல்லுதல்தகாது';  என்பது குறிப்பு.  உன்னின் - ஆலோசிக்குமிடத்து எனினுமாம்.  கன்றி - அடிப்பட்டு.  ‘கொல்வதே கன்றி நின்றார் கொடியவர் கடிய நீரார';  (சீவக.  2776)என்பது காண்க.  ‘எல்லாம்'; என்றது,  சண்டமாரியே கனவில் தோன்றிக் கூறினாளென்றதும் அவளுக்குப் பலி

 

1 மின்றி

 



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:13:49(இந்திய நேரம்)