Primary tabs
(இ-ள்.) மாவினில் வனைந்த கோழி வடிவு கொண்டு-அரிசிமாவால் மிக அழகாகச் செய்து வர்ணம் பூசப் பெற்றகோழி யுருவை எடுத்துக் கொண்டு, மன்னன்- --, அவ்வை ஆய பாவி தன்னோடு-தாயாகிய பாவியுடன், படுகொலைக்குஇடமது ஆய தேவிதன் இடை-(பல் உயிர்களையும் மடிக்கும்) கொடிய கொலைக்களமாகிய சண்டமாரிகோயிலின் கண், சென்று எய்தி-சென்றடைந்து, சிறப்பொடு வணக்கம் செய்து - விழா வெடுத்து அஞ்சலி செலுத்தி, ஆ -அந்தோ!அவன - அவ் யசோதரன், தன் கை வாளால்-தன் கையின் வாளால், எறிந்து- (தானே மாக்கோழியின்தலையை) வெட்டி, இது கொண்டு அருள் - தேவியே, இப்பலியை ஏற்றருள்வாயாக, என்றான் - என்று வேண்டினான். (எ-று.)
அன்னையுடன் சென்ற மன்னன், தேவிக்கு மாக்கோழியைப் பலியிட்டா னென்க.
மாவினில் - மாவினால்; வேற்றுமை மயக்கம். வனைதல்-அலங்கரித்தல். அவ்வை -தாய். பாவத்தைச் செய்ய ஏவிய காரணத்தால், அவளைப், ‘பாவி ‘ என்றார். இரக்கத்தால், ‘ஆ‘ என்று கூறினார் ஆசிரியர். தேவி - மாரி தேவதை. தன், சாரியை. இனி, ‘எறிந்துகொண்டு‘ என்று சேர்த்துச்சொல்லினுமாம். (67)
மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்
(இ-ள்.)
மேல் இயல் தெய்வம் - வானில் இயங்கும்தெய்வம் (ஒன்று), கண்டு - (அரிசி மாவால்
செய்து வர்ணம்