Primary tabs
இரக்க மில்லாத செயல், ஆ தகாது - அந்தோ! தகுவதன்று, அழிந்த புள்வாய் - வெட்டுப்பட்டு இறந்த மாக்கோழி வாயின், அரிகுரல் - வலிய குரல், நெஞ்சை அரியும் - (என்) நெஞ்சை அறுக்கின்றது, ஆ தகாது - --, அமிர்த முன்னா மதியவள் - அமிர்தமதியின் , களவு - கள்ளஒழுக்கம், கொல்லும்-(என்னைக்) கொல்லும், ஆ தகாது ---,ஆ -அந்தோ ! தகாத-தகுதியில்லாத, வினைகள்-(என்) பழவினைகள், என்னை அடர்த்து நின்று - என்னைத் தாக்கி நின்று, அடும் கொல் - கொல்லும்போலும் ! என்றான் என்று யசோதரன் நைந்தான். (எ-று.)
யசோதரன் அருளில்லாத தனது செயலும், மாக்கோழியின் குரலும், மனைவியின் சதியும், கொடிய விதியும்தன்னை ஒருசேர வருத்துகின்றன என்று வருந்தினான்என்க.
‘ஆ தகாது‘ (சீவக. 1106) என்று வந்துள்ளது காண்க.‘அமிர்த முன்னா மதி‘ (25ல்) அபய முன்னுருசி யென்றது போலக் கொள்க. அமிர்தமதியவள் என்றது சாத்தனவன் என்பது போலவந்தது. (70)
அரசன் துறவு மேற் கொள்ள வீழைதல்
(இ-ள்.) இசோதரன் - --, இனையன நினைவு தம்மால் -இவை போல்வன
பல எண்ணங்களுடன், நகரம் எய்தி -நகரத்தை அடைந்து, தனையனில் அரசு வைத்து - தன்
மகன்யசோமதிக்கு முடி சூட்டி, தவவனம் படர்தல் உற்றான் -(துறவு
மேற்கொண்டு) தவம் செய்தற்குரிய வனஞ்செல்லக்கருதினான்; தேவி அனையதை அறிந்து
- அமிர்தமதி(கணவனுடைய) கருத்தைக் குறிப்பாலுணர்ந்து, எனைஅவமதித்து - என்னை அவமானஞ்
செய்து, விடுத்தான் -நீக்கினான், என நினைந்து - என்று எண்ணி, எரிநகரத்து