Primary tabs
வீழ்வாள் - அனலைப்போலத் துன்பந்தரும் நரகத்துவீழ்வாளாகிய அவள், ஏது செய்தாள் - என்ன கொடு்ஞ்செயல் செய்தாள் ! காண்மின். ( எ-று.)
மகனை அரசியலில் வைத்து வனஞ் செல்லக் கருதிய மன்னனுக்கு, தேவி கொடிய சதி செய்வாளாயினா ளென்க.
படர்தல், செல்லுதல். ‘நரகத்து வீழ்வாளாகிய தேவி‘ என்றும் இயைக்கலாம். வீழ்வாள், வினையாலணையும் பெயர். (71)
மேல் (இ-ள்.) விரை செய் தார் இறைவ - மணங் கமழும் மலர்மாலை யணிந்த தலைவனே, அரச - அரசனே, அரசு நீ துறத்தியாயின் - தாம் அரசபாரத்தைத் துறப்பீராயின், எனக்கும் - அடிச்சியாகிய எனக்கும், அஃதே - அத்துறவே, அமைக - அமைவதாகுக; என் வியன் மனை -எனது பெரிய மனையில், இன்று - இன்றைக்கு, நீ மைந்தனோடும் - நீர் நம் மகனோடு, அமுது கைக்கொண்டருளுதற்கு உரிமை செய்தால் - உணவினை ஏற்றருளுதற்கு அன்பு செய்தால், அடிகள் - --, அரசு - அரசுரிமையை, அவனதாகநாம் விடுதும் - அவனுக்கு உரித்தானதாக (நாம்) விடுவோம்,என்றாள் - என்றியம்பினாள்.
மன்னன் உணவு கொள்ளும்படி அரசி வேண்டினாளென்க.
அவனதாக இடுதும் என்றும் பிரித்துப் பொருள்கூறலாம், அடிகள் உயர்வு குறிக்குஞ் சொல்; (சீவக.1873, 2099). (72)