Primary tabs
(இ-ள்.) ஆங்கு - அப்பொழுது, அவள் அகத்துமாட்சி - அமிர்தமதியின் மனத்து இழிநிலையினை, அரசன் --, அறிந்தனன் ஏனும் - (நன்கு) அறிந்திருந்தானாயினும், வீங்கிய முலையினாய் - --, நீ வேண்டியது அமைக -நீ விரும்பிய வண்ணம் ஆகுக, என்று -என்று கூறி, தாங்கலன் - (மனத்தில் அவள் செயலைத்) தாங்கப் பெறாதவனாகி, அவள் மனை - அமிர்தமதியின் அந்தப்புரத்தில், அவ்வைதன்னோடு - தன் தாயோடு, அமர்ந்தான் - (உணவு உட்கொள்ள) அமர்ந்தான்; தீங்கு அது குறுகில் - தீங்கு தரும் தீவினை உதயமாகில், தீய நயமும் - (பிறர் கூறும்) நயவஞ்சகமும், நன்னயம் அது ஆம் - சிறந்த நீதியாகக் கருதப்படும். (எ-று.)
அரசியின் எண்ண மறிந்த மன்னனும் தீவினையால் மயங்கி உணவு ஏற்க இசைந்தா னென்க.
ஆங்கு என்பது, காலத்தையும் இடத்தையும் காட்டும் இடைச்சொல், மாட்சி, குறிப்பு மொழி. அரசன், அமிர்தமதியின் எண்ணம் அறிந்தவ னாயினும், ‘புத்தி; கர்மாநுஸாரிணீ‘ (க்ஷத்ர) என்ற ஆன்றோர் வாக்கின்படி அவள் விருப்பத்திற்கு உடன்பட்டா னென்க. (73)
(இ-ள்.) வஞ்சனை வலித்து - (அமிர்தமதி தன்காரியம் முடிக்க) வஞ்சனையை மேற்கொண்டு, தேனின் நறுஞ்சுவை பெரியவாக - தேனைக்காட்டிலும் இனிய சுவையில் மிக்கனவாக, நஞ்சொடு கலந்த - --, எஞ்சல்இல்லட்டுகங்கள் - குறைவில்லாத இலட்டுக்களை, இருவரும் அருந்துக என்று - இருவீரும் உண்க என்ற சொல்லி, மாமி தன்னுடன் வரனுக்கு - தன் மாமிக்கும் மணாளனுக்கும், ஈந்தாள் - அளித்தாள்; நஞ்சொடு படாத -நஞ்சொடு
1 லட்டு வங்க.
2 படரத்