Primary tabs
அமிர்தமதி, மகனை நோக்கி, நீ மன்னனைப் பிரிந்ததுயான்செய்த தீவினை; இனி, இதற்கு வருந்தாது, முடிபுனைந்து ஆள்க வென்றாளென்க
என்வினை என்று கூறுவது உலகவழக்கு. ‘இனையைநீயாயதெல்லாம் எம்மனோர் செய்த பாவம்‘ (சீவக. 391,315) என்றது அறிக. விடுத்திடு - ஒருசொல். யசோமதியின் துன்பம் பெரிதாதலின். ‘வெந்நோய்‘ என்றார்.‘பொதுக்கடிந்து ஆளுதல்‘ பூமி பிற அரசர்களுக்கு உரிமையின்றி ஏகசக்ராதிபனாய் ஆளுதல். (80)
யசோமதி முடிபுனைந்து அரசனாதல்
(இ-ள்.) ஏர் அணி ஆரம்மார்பன் - அழகிய ஆரமணிந்த மார்பினனான, இசோமதி - யசோமதி, வார் அணிமுரசம் ஆர்ப்ப - வார்க்கட்டமைந்த மங்கள முரசு முழங்க, மணிபுனை மகுடஞ் சூடி - மணிபுனைந் தியற்றிய முடியைச் சூடி, இறைமை எய்தி - ராஜபதவியை அடைந்து, சீர்அணி அடிகள் - (தேவர்கள் இயற்றிய) சிறப்படைந்த ஆதி பகவன் அருளிய, செல்வத் திரு அறம் - முக்திச் செல்வத்தைத் தரும் திருவறத்தினை, மருவல் செல்லான் - சேராதவனாகி, ஓர் அணி ஆரமார்பர் - ஒப்பற்ற அழகிய ஆரமணிந்தமார்பினாரான மாதர்களின், உவகை அம் கடலுள் ஆழ்ந்தான் - காமக்கடலினுள் மூழ்கி இன்புற்றான். (எ-று.)
யசோமதி அரசனாகி, திருவறத்தை மேற்கொள்ளாமல் மகளிர் இன்பத்தை அனுபவித்தானென்க.
இறைமை-அரசனாந் தலைமை. திருவறம் - ஜிநதருமம்.
1 மருளல்.
2 மார்ப னுவகை.