தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 198 -
154. 
இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின்
 
இனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம
 
இனையது தெளிவி லாதா ரிருநில வரசு செய்கை
 
வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான்.

(இ-ள்.) வனை மலர் மகுட மாரிதத்தனே - புனைந்த மாலையும் முடியு மணிந்த மாரிதத்த வரச, வினையின் ஆகும் இயல்பு - வினைகளின் நேருந் தன்மைகள், இனையன - இத்தன்மையன; துணைவர்ஆகும் - (தனக்குத்) துணைவரான, இளையரின்-மகளிரால் விளையும் இன்பம் - ‘உண்டாகும் இன்பங்கள், இளையன - --, தெளிவு இலாதார் - நற்காட்சியில்லாதவர், இருநிலம் அரசு செய்கை - பெரிய பூமியை அரசாளுந் தன்மை, இனையது - இத்தகையது;  இது தெரிதி ஆயின் - இதனைத் தேர்வாயானால், இது மதி என்றான் - யான் கூறிய இதனை மனத்தில் உறுதி தருவதாகக்கொள் என்று அபயருசி கூறினான்.  (எ-று.)

அபயருசி மாரித்ததனைக் குறித்து, வினைகளின் இயல்பும், மனைவியின் செயலும், அறம் மேற்கொள்ளாத வரசரின் கதியும் இனையன ஆகும். ஆதலின் இன்னும் இதனை மதித்துக் கேள் என்று கூறினானென்க.

நஞ்சூட்டியதனை, ‘இளையரின் விளைவு'; என்றான். மாரிதத்தன், தன் அரசியற்செயலை ஆராய்தல் வேண்டி, ‘இளையது தெளிவிலாதார் இருநிலவரசு செய்கை‘ என்றான் எனினுமாம்.(82)

இரண்டாம் சருக்கம் முற்றிற்று.

-------

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:16:35(இந்திய நேரம்)