Primary tabs
பயன் - தீவினையின் பயன், வெல்வதற்கு அரிது - (முனிவர்க்கு அன்றி ஏனையோர்க்கு) வெல்வதற்கு அருமையாகும் (எ-று.)
மன்னனும் தாயும் தீவினையினால் பொறுத்தற்கரிய துன்ப மடைந்தார்களென்க.
வதம் - விரதம். உளம் முன்செய் கொடுமை, எண்ணத்தாலீட்டிய தீவினை; ‘உயிரவணில்லையேனும் உயிர்க்கொலை நினைப்பினால்‘ என்பர் (245) முன்னரும். ‘எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை, வீயாது பின்சென்றடும்‘ என்றார் (குறள், 207) தேவரும். (10)
(இ-ள்.) மற்று ஓர் நாள் - பின் பொருநாள், மணி மண்டபத்தின் புடை - அழகிய மண்டபத்தின் பக்கத்தே, அற்றம் ஆ இருந்து - மறைவாக இருந்து, வார் முற்று முலையாள் - கச்சு அணிந்த பூர்ணமாக வளர்ந்த முலையினளான அமிர்தமதி, அட்டபங்கன்தனை - அட்டபங்கன் என்னுஞ் சோர நாயகனை, முயங்கும் திறம் - புணரும் செயலை, வந்தது அ மாமயில்கண்டது - அங்கு வந்ததாகிய அந்தச் சிறந்த பெரிய மயில் பார்த்தது. (எ-று.)
சோரநாயக னுடனிருந்த அரசியை மயில் கண்ட தென்க.
‘வார் முலையாள்‘ என்றது, முன்னைய நிலைமையினைக் கருதி. மற்று, அசை. (11)
1 னமர்ந்த.
2 வல்லது.
3 சாரனொண்.