தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 209 -

வந்து, கார் இருள் வண்ணத்த நாகம் ஆய் - மிக்க இருள் போலும் நிறமுடைய கரும்பாம்பாய்ப் பிறந்து, அந்தில் - அவ்விடத்தே, ஊர்தர - ஊர்ந்து செல்ல, பன்றி - அதனைக் கண்ட முள்ளம்பன்றி, வேர்த்து - வைரத்தால் கோபித்து, உருள - உயிர் நீங்கி உருளும்படி செய்து (கொன்று), குடர் வெந்து எழும்பசி-(தனது) குடர்  கொதித் தெழும்பசியை, விட்டது - நீக்கியது.  (எ-று.)

முட்பன்றி, பசியாலும் வைரத்தாலும் கோபித்துக் கரும்பாம்பைக் கொன்ற தென்க.

வைரம், முன் மயிலாய் இருந்தபோது நாய் கவ்வியதனால் உண்டாயது என்னலாம்.    (17)

172. 
தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற்
 
சீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர்
 
பாய நொந்து பதைத்துடன் வீ்ழ்ந்தரோ
 
போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே.

(இ-ள்.) தாய் கொல் பன்றி - (முற்பிறவியின்) தாயைக் கொன்ற பன்றி, தளர்ந்து - (பாம்பைப் கொன்றதனால்) வலிமை குறைந்து, அயர் போழ்தினில் - சோருஞ் சமயத்தில், சீயம் ஒன்று என - ஒரு சிங்கம்போல, சீறு உளியம் எதிர்பாய - கோபங்கொண்ட கரடி. எதிர்சென்றுபாய, பன்றி - --, நொந்து - மனம் நொந்து, பதைத்து உடன் வீழ்ந்து - துடிதுடித்து வீழ்ந்து, இன்உயிர் பொன் றுபு போயது - இனிய உயிர் அழிந்துஇறநதிட்டது. (எ-று.)

கரும்பாம்பைக் கொன்ற முட்பன்றி கரடி கொல்ல இறந்த தென்க. அரோ,அசை.(18)

மன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்

173. 
மன்னன் மாமயில் சூகரம் வார்புனல்
 
இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள்
 
உன்னு மொப்பி லுலோகித விப்பெயர்
 
மன்னு மீனின் வடிவின தாயிற்றே.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:18:23(இந்திய நேரம்)