Primary tabs
(இ-ள்.) அந்தரத்து - (மீனுக்கும் முதலைக்கும்) இடையே, ஒரு கூனி நின்று ஆடுவாள் - (அரசன் கோயிலைச்சார்ந்த) கூனி யொருத்தி அவ் யாற்றில் நீராடுபவளை, அது - அம்முதலை, வந்து - (அருகில்) வந்து, வாயின் மடுத்து கொண்டது - வாயாற் கவ்வி விழுங்கிற்று; மன்னவன் - (அதனையறிந்த) யசோமதி, கொந்து வேய் குழல் கூனியை-பூங்கொத்தணிந்த கூந்தலினளாகிய அக் கூனியை, கொல்கரா- கொன்ற முதலையை, தந்து கொல்க என - பிடித்து வந்த கொல்வீராக என்று, சாற்றினான், (ஏவலர்க்குக்) கட்டளை யிட்டான். (எ-று.)
முதலை உலோகிதமீனைப் பற்ற வரும்போது எதிரில் அகப்பட்ட கூனியை விழுங்க, அஃதறிந்த அரசன், முதலையைக் கொல்லக் கட்டளையிட்டானென்க.
கூனர் குறளர் முதலியோர் அரசியரைச் சார்ந்திருப்பவர். ‘கூன்களும் குறளும் அஞ்சி‘ (சீவக. 769) என்பதும், ‘கூனொடு குறளுஞ் சிந்தும்‘ (கம்ப. எழுச்சிப். 69) என்பதும் காண்க. (21)
(இ-ள்.) வலையின் வாழ்நரின் - மீன்வலைக்கொண்டு வாழ்க்கை நடத்தும் பரதவாரல், வாரிற் பிடித்த பின் - வலை வீசி (அம் முதலையைப்) பிடித்துக்கொணர்ந்த பிறகு,சிலர் - --, சலாகை வெதுப்பிச் செறித்தனர் - இரும்புக் கம்பியைச் காய்ச்சி அதன் உடற்குள் செலுத்தினர், கொலைவலாளர் - கொலைத் தொழிலில் கைதேர்ந்த ஏவலர்கள், குறைத்தனர் ஈர்ந்தனர் - அதன் உடலை வெட்டி வாள் கொண்டு அறுத்தனர்;(மற்றும்), பலர் அலை செய்தார் -பலர் துன்புறுத்தினார்கள். அவை கூறுவார் யார் - அத்துன்பவகைகளைக் கூறுபவர் யார்? எவருமில்லை என்றபடி.